இன்று நன்றி சந்திப்பு நடத்தும் 'ரெட்ரோ' குழு | ஏ.ஆர்.ரஹ்மான் 2 கோடி நஷ்ட ஈடு வழங்க கோர்ட் இடைக்கால தடை | ஒரு திரைப்படத்தை டிஜிட்டல் வடிவில் மாற்ற இவ்வளவு சிரமமா? | பணி 2ம் பாகம் உறுதி : ஜோஜூ ஜார்ஜ் அறிவிப்பு | பழங்குடியினர் என்கிற வார்த்தையை பயன்படுத்தியதற்காக வருத்தம் தெரிவித்த விஜய் தேவரகொண்டா | நிர்பந்தத்தால் விஜய்யின் கடைசி படத்தை இயக்க முடியாமல் போனது : இயக்குனர் கோபிசந்த் மாலினேனி | போதைப்பொருள் வைத்திருந்ததாக துல்கர் சல்மான் பட இயக்குனர் கைது | தமிழ் சினிமாவில் யாளி | பேரனுடன் செலவிடுவது பொன்னான நேரம் | நயன்தாராவின் ‛பீலிங்' |
விஷால் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த 'மத கஜ ராஜா' படம் வெற்றிப் படமாக அமைந்தது. 12 வருடங்களுக்குப் பிறகு வெளிவந்த இப்படம் 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இப்படத்திற்குப் பிறகு விஷால் நடிக்கும் படங்கள் பற்றி தீவிரமான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது.
'துப்பறிவாளன் 2', கவுதம் மேனன் இயக்கத்தில் ஒரு படம் என பேசி வருகிறார்கள். இவற்றோடு ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிக்க உள்ள ஒரு படம் பற்றியும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம்.
2015ல் வெளிவந்து வெற்றி பெற்ற 'ஈட்டி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ரவி அரசு. அடுத்து அவர் இயக்கிய 'ஐங்கரன்' படம் சில வருடங்கள் தாமதமாக வெளிவந்து வரவேற்பைப் பெறாமல் போனது. அடுத்து சிவராஜ்குமார் நடிக்கும் 'ஜாவா' என்ற கன்னடப் படத்தை இயக்க இருந்தார் ரவி அரசு. ஆனால், அந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஆரம்பமாகவில்லை.
இதனிடையே, விஷால் நடிக்க ரவி அரசு இயக்க உள்ள படத்திற்கான பேச்சுவார்த்தை ஆரம்பமாகி உள்ளதாம். இப்படம் ஏறக்குறைய உறுதியாகிவிட்டதாகத் தகவல்.