தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் |

ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்து நடிகர் மகேஷ் பாபுவின் 29வது படத்தை இயக்கி வருகிறார். கடந்த இரண்டு வருடங்களாக இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் பிரித்விராஜ் மற்றும் பிரியங்கா சோப்ரா இருவரும் மிக முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கடந்த மாதத்தில் இருந்து இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஒடிசாவில் உள்ள கோரட்பூர் பகுதிகளில் நடந்தது. மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா சம்மந்தப்பட்ட சில காட்சிகள் , சண்டை காட்சியும், ஒரு பாடலின் சில பகுதியையும் படமாக்கியுள்ளனர். தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதற்கு அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில் விரைவில் துவங்கும் என்கிறார்கள்.
இதனிடையே படப்பிடிப்பு முடிந்த கையோடு அந்த பகுதியில் உள்ள உள்ளூர் மக்களையும் மகேஷ்பாபு, பிரியங்கா, ராஜமவுலி உள்ளிட்ட படக்குழுவினர் சந்தித்தனர். அதுதொடர்பான போட்டோக்களும் வெளியாகின.