பாரதத்தின் கலாசாரம் தெரியாத இளைஞர்கள்: ரஜினி வேதனை | ஆன்லைன் முன்பதிவு டிரெண்டிங்கில் முந்தும் 'ஹிட் 3' | ஏஐ தொழில்நுட்பத்தில் வ.உ.சி வாழ்க்கை வரலாற்று படமாக உருவாகும் 'நாவாய்' | 'டிடி நெக்ஸ்ட் லெவல்' டிரைலர் - கவுதம் மேனனையே கலாய்ச்சிட்டீங்களே… | பிஸியோதெரபி சிகிச்சையில் அஜித்குமார் | மே ரிலீஸ் பட்டியலில் ஒவ்வொன்றாய் சேரும் படங்கள் | 'ரெட்ரோ' வெற்றி, யார், யாருக்கு முக்கியம்? | கதாநாயகிகள் அதிக சம்பளம் கேட்கக் கூடாதா? | தேவ் கட்டா வெப் சீரிஸில் நடிக்கிறாரா நாக சைதன்யா | இந்தியாவில் முதலில் வெளியாகும் டாம் குரூஸ் படம் |
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கவனிக்க வைத்தவர் பாலாஜி தரணிதரன். இதில் விஜய் சேதுபதி நாயகனாக நடித்தார். தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் சீதக்காதி படமும் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டை பெற்றது. இவர்கள் இப்போது மூன்றாவது முறையாக ஒரு படத்தில் இணைகின்றனர். இதனை இயக்குனர் அட்லி, அவரின் ‛ஏ பார் ஆப்பிள் புரொடக்சன்ஸ்' நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறுகிறது. தற்போது இதற்கான அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது என்கிறார்கள். மேலும், இந்த படத்திற்கான உடல் எடையை குறைக்கும் முயற்சியில் தீவிரமாக விஜய்சேதுபதி ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.