அஜித்துக்கு ஜோடியாகும் கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி | கைதி 2வில் இணைகிறாரா அனுஷ்கா? | கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் |
.தமிழில் அறிமுகமானாலும், அதன் பின் தமிழில் நடிக்காமல் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக உயர்ந்தவர் பூஜா ஹெக்டே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'பீஸ்ட்' படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வந்தார்.
தற்போது சூர்யா ஜோடியாக 'ரெட்ரோ' படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். மே 1ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பூஜா அவரது சொந்தக் குரலில் பேசியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து காமிக்ஸ் வடிவிலான சில போஸ்டர்களைப் பகிர்ந்துள்ளார்கள்.
பூஜா இதுவரை எந்த ஒரு பிராந்திய மொழிப் படத்திலும் அவரது சொந்தக் குரலில் பேசியதில்லையாம். முதல் முறையாக தமிழில் அவர் டப்பிங் பேசியுள்ளார். இப்படத்தில் தமிழில் பேசி நடிக்க ஆரம்பத்திலிருந்தே பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார் பூஜா. அவருக்கு பேர் சொல்லும் படமாக இப்படம் அமையும் என படக்குழு நம்பிக்கையுடன் உள்ளார்கள்.