25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு கம்பேக் தரும் சங்கீதா | சர்தார் 2 டப்பிங் பணிகளை தொடங்கிய கார்த்தி | ரம்பாவின் சொத்து மதிப்பு 2000 கோடி: தயாரிப்பாளர் தாணு தந்த தகவல் | ஸ்ரீதேவியின் 'மாம்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கும் மகள் குஷி கபூர் | ஹிந்தியில் 'டாப் ஸ்டார்' ஆகும் ராஷ்மிகா மந்தனா | இளையராஜாவை தொடர்ந்து சிம்பொனியை அரங்கேற்றும் லிடியன் நாதஸ்வரம் | நீண்ட நாள் நண்பரை கை பிடிக்கும் அபிநயா | புதிய சீரியலில் மான்யா ஆனந்த் | மீண்டும் வெளியாகும் பாஸ் என்கிற பாஸ்கரன் | போதை பொருள் விளம்பரம் : ஷாருக்கான், அஜய் தேவ்கான் ஆஜராக நுகர்வோர் கமிஷன் உத்தரவு |
பொதுவாக நடிகை குமாரி சச்சு என்றால் அவர் காமெடி நடிகை, திருமணம் செய்து கொள்ளாதவர் என்றுதான் நினைவுக்கு வரும். நடிகர்களில் நம்பியார் எப்படியோ அப்படி நடிகைகளில் சச்சு. ஆன்மிக வாழ்க்கைக்காக தன்னை அர்ப்பணித்தவர்.
அவர் வீடு முழுவதும் சாமி படங்கள் இருக்கும், வீட்டை சுற்றி வகைவகையான பூச்செடிகள் இருக்கும். இன்ன தேதியில் இந்த சாமிக்கு இந்த பூ கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டு அர்ச்சனை செய்கிறவர்.
அவரது சொந்த ஊரான புதுப்பாடி கிராமத்தில் அவரின் முன்னோர் கட்டிய வைத்திய நாதசுவாமி - திரிபுரசுந்தரி அம்மன் கோயில் இருக்கிறது. ஆனால் அந்த கோவில் பராமரிப்பின்றி கிடந்தது. சச்சுதான் பெரிய அளவில் நிதி திரட்டி தனது சொந்த பணத்தைபோட்டு அந்த கோவிலை சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்தினார். அதே ஊரில் உள்ள பெருமாள் கோவிலையும் சீரமைத்தார்.
காஞ்சிபுரம் அருகில் திருப்புலிவனம் கோவில் உள்ளது. மயிலை கபாலி கோயிலை விடப் பெரியது. அந்த கோவில் கும்பாபிஷேகத்தையும் முன்னின்று நடத்தினார். அதோடு அங்கு ஒரு விநாயகர் கோவிலையும் கட்டிக் கொடுத்தார்.
சச்சுவின் இந்த ஆன்மிக வாழ்க்கைக்கு ஒரு காரணம் உள்ளது. 1960களில் சச்சுவும், அவரது சகோதரியும் மேடை நடனம் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஒரு நிகழ்ச்சிக்கு ஆடக் கிளம்பும்போது சச்சுவுக்கு அம்மை போட்டிருந்தது. இதனால் சச்சுவின் அம்மா விழா ஏற்பாட்டாளர்களிடம் விபரத்தை சொன்னார். ஆனால் அவர்கள் நம்பாமல் கடுமையாக திட்டினார்கள். இதனால் கோபம் அடைந்த சச்சுவின் அம்மா மயிலாப்பூர் முண்டககன்னி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டு என் மகளை உன்னை நம்பி ஆட வைக்கிறேன். நீதான் அவளை பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கூறி அழைத்து சென்றார்.
சச்சுவிற்கு அம்மை போட்டிருப்பதை பார்த்து விழா ஏற்பாட்டாளர்கள் அவர் ஆட வேண்டாம் என்றார்கள். ஆனால் எல்லாத்தையும் அம்மன் பார்த்துக்குவாள் என்று கூறி ஆட வைத்தார். சச்சு ஆடி முடித்து மேடையில் இருந்து இறங்கி வந்ததும் அம்மை கொப்பளங்கள் காணாமல் போயிருந்தது. இந்த நிகழ்வே சச்சுவின் ஆன்மிக ஈடுபாட்டுக்கு காரணமாக அமைந்தது.