தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
கங்குவா படத்தை அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‛ரெட்ரோ' படத்தில் நடித்துள்ளார் சூர்யா. அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்த படத்தில் ஜெயராம், கருணாகரன், ஜோஜு ஜார்ஜ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். ஸ்ரேயா சரண் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ள இந்த ரெட்ரோ படம் மே ஒன்றாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படம் கேங்ஸ்டர் கதையில் உருவாகி இருப்பதாக செய்திகள் வெளியானபோது இப்படம் ஆக்சன் கலந்த காதல் கதையில் உருவாகி இருப்பதாக கூறினார் கார்த்திக் சுப்பராஜ்.
இந்த நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள இன்னொரு செய்தியில், ‛இந்த ரெட்ரோ படத்தின் டைட்டில் டீசர் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த பாடல் விரைவில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முக்கிய காட்சிகளை பார்த்த சூர்யா மகிழ்ச்சி அடைந்ததோடு, கண்டிப்பாக இந்த படம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் சொன்னதாக' கூறுகிறார் கார்த்திக் சுப்பராஜ்.