மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
பிரபல நடிகை ராதிகாவிற்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சினிமாவிலும் சின்னத்திரையிலும் மிகப்பெரிய ஆளுமையாக வலம் வந்த ராதிகா, தற்போது நடிப்பு ஒருபக்கம் அரசியல் ஒரு பக்கம் என பிசியாக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து நடைபெற்றுள்ளது. இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள ராதிகா, 'நான் எப்போதும் என்னை பற்றியோ என் வேலை பற்றியோ பேச மாட்டேன். கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு ரொம்ப கொடுமையாக இருந்தது. படங்களில் நடித்து கொண்டிருந்த போது காலில் அடிபட்டது. மாத்திரைகள், பிசியோதெரபி பலனளிக்கவில்லை. மருத்துவர் பரிந்துரையின்படி அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருந்தது.
அதேபோல் என்னுடைய மிக்கபெரிய தூண், வலிமை, தங்க இதயம் கொண்ட சரத்குமார் இந்த இரண்டு தினங்களாக என்னை குழந்தை போல் பார்த்துக் கொண்டார். இந்த மகளிர் தினத்தில் ஒவ்வொரு பெண்ணும் தன்னைப் பற்றியும் தன்னை மேம்படுத்திக் கொள்ளவும், உங்களை அதிகமாக நேசிக்கவும், உங்களை பாராட்டிக் கொள்ளவும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன்' என அந்த பதிவில் குறிப்பிட்டு உலக பெண்கள் தினத்திற்கான வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.