வல்லவன் ஒருவன், முள்ளும் மலரும், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள் | அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் டிரைலர் ரிலீஸ் எப்போது? | ரீ-ரிலீஸில் மோதும் ரவி மோகன், சிவகார்த்திகேயன் | இயக்குனராக அறிமுகமாகும் எஸ்.பி.பி. சரண் | சிம்பு கைவிட்ட கதையை பிடித்த சிவகார்த்திகேயன் | பிளாஷ்பேக் : கிராமங்களில் திரைகட்டி காட்டப்பட்ட சுஹாசினி படம் | இயக்குனர் சீமா கபூரின் சுயசரிதை வெளியீடு : திரைப்பிரபலங்கள் பங்கேற்பு | இறுதி கட்டத்தில் '3பிஎச்கே' | 'காளிதாஸ்' 2ம் பாகம் தயாராகிறது | 'மைலாஞ்சி'யில் முக்கோண காதல் |
கடந்த 2018ம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கிய படம் 96. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பிறகு கடந்தாண்டு கார்த்தி, அரவிந்த்சாமி நடிப்பில் மெய்யழகன் என்ற படத்தை இயக்கிய பிரேம்குமார், அடுத்தபடியாக 96 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப் போகிறார். இப்படத்தின் முதல் பாகத்தை காதல் கதையில் இயக்கிய அவர், இரண்டாம் பாகத்தை செண்டிமென்ட் கதையில் இயக்குகிறார்.
இந்த படத்தின் கதையை சமீபத்தில் இப்படத்தை தயாரிக்கும் ஐசரி கணேசன் இடத்தில் கூறியுள்ளார் பிரேம் குமார். அதைக் கேட்டு அசந்து போன அவர், இதுவரை இப்படி ஒரு கதையை நான் கேட்டதே இல்லை. இந்த படமும் 96 படத்தை போன்று மிகப்பெரிய வெற்றி பெறப்போகிறது என்று கூறியவர், இயக்குனர் பிரேம்குமாருக்கு 5 பவுனில் ஒரு தங்க செயினை பரிசாக அளித்து இருக்கிறார். விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.