2வது திருமண வதந்தியால் மனவேதனை: நடிகை மீனா | ஆயுத பூஜைக்கு வெளியாகிறது சூர்யாவின் ‛கருப்பு' படத்தின் முக்கிய அப்டேட் | ஹுமா குரோசிக்கு காதலருடன் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததா? | எப்போது திருமணம்? ஜான்வி கபூர் அளித்த பதில் | 25 ஆண்டுகளுக்குபின் ரீ ரிலீஸ் ஆகும் ‛குஷி' | ஜித்தன் ரமேஷ் நடிக்கும் ‛ஹிட்டன் கேமரா' | 100 சதவீதம் விஜய்யிசம் ; ‛ஜனநாயகன்' குறித்து படத்தொகுப்பாளர் பகிர்ந்த தகவல் | படம் வெளியாகி ஒரு வருடம் கழித்து மம்முட்டியின் ‛டர்போ' புரோமோ பாடல் ரிலீஸ் ; ரசிகர்கள் கிண்டல் | ‛உஸ்தாத் பகத்சிங்' படப்பிடிப்பை நிறைவு செய்த ராஷி கண்ணா | தாமதமாக சொன்ன ஓணம் வாழ்த்து ; வருத்தம் தெரிவித்த அமிதாப் பச்சன் |
இந்தியத் திரையுலகத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னடத் திரைப்படமான 'கிரிக் பார்ட்டி' படத்தில் அறிமுகமாகி பின்னர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார்.
அவர் நடித்து சமீபத்தில் ஹிந்தியில் வெளியான 'சாவா' படமும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தன்னை ஹைதராபாத்திலிருந்து வந்தவர் என்று குறிப்பிட்டுப் பேசினார். இது கன்னட மக்களையும், கன்னட சினிமா ரசிகர்களையும் கோபமடைய வைத்தது. அது குறித்து எந்தவிதமான வருத்தத்தையும் ராஷ்மிகா வெளியிடவில்லை.
இதனிடையே, கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ., ரவி கனிகா என்பவர் ராஷ்மிகாவை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். பத்திரிகையார் சந்திப்பில் அவர் பேசுகையில், “கன்னடப் படமான 'கிரிக் பார்ட்டி' படத்தில் தன்னுயைட சினிமா பயணத்தை ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா, கடந்த வருடம் பெங்களூருவில் நடைபெற்ற சர்வதேசத் திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைத்த போது வர மறுத்துவிட்டார்.
தனக்கு ஐதராபாத்தில் வீடு இருப்பதாகக் கூறியுள்ளளார் ரஷ்மிகா. கர்நாடகா எங்கிருக்கிறது என்று தெரியவில்லை எனப் பேசியிருக்கிறார். திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அவருக்கு நேரமில்லை. சட்டசபை உறுப்பினர் ஒருவர் ராஷ்மிகாவை 10, 12 முறைக்கு மேல் சந்தித்து அழைப்பு விடுத்தார். ஆனால், அவர் வர மறுத்துவிட்டார். இங்கு வாழ்க்கையை ஆரம்பித்தவர் கன்னடத்தை அவமதித்துள்ளார். அவருக்கு நாம் தக்க பாடம் கற்பிக்க வேண்டாமா?” என கொந்தளிப்புடன் பேசியுள்ளார்.