வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி | 100 கோடி வசூல் கடந்த 'மிராய்' | கிஸ் கொடுத்தது மிஷ்கின் தான் : மேடையில் அறிவித்த கவின் | இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மருத்துவமனையில் அனுமதி | பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உன்னி முகுந்தன் | ஆஸ்பத்திரியில் ரோபோ சங்கர் : அவர் உடல்நிலை எப்படி இருக்கிறது | திரிஷ்யம் படத்தின் கிளைமாக்ஸ் ஆக நான் முதலில் எழுதிய காட்சி வேறு ; ஜீத்து ஜோசப் | இயக்குனருக்கு தெரிவிக்காமலேயே ரீ ரிலீஸுக்கு தயாராகி வரும் மம்முட்டியின் 'சாம்ராஜ்யம்' | ஹேக் செய்யப்பட்ட மொபைல் போன்கள் ; உபேந்திரா-பிரியங்கா தம்பதி விடுத்த எச்சரிக்கை | பிரதமர் மோடிக்கு, ரஜினி, கமல், இளையராஜா பிறந்தநாள் வாழ்த்து |
பாலா இயக்கிய 'நந்தா, பிதாமகன்' படங்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் லைலா. தற்போது லைலா தமிழில் ரீ என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். விஜய்யின் 'கோட்' படத்தில் நடித்தார். தற்போது அவர் வில்லியாக நடித்துள்ள 'சப்தம்' படம் வெளியாகி உள்ளது.
பாலா இயக்கிய வணங்கான் பட வெளியீட்டிற்காக நடத்தப்பட்ட புரமோசனின் ஒரு பகுதியாக பாலா சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை விழா நடத்தி கொண்டாடினார்கள். இதில் சூர்யா, சிவகுமார், அருண் விஜய் என அவரோடு பணியாற்றியவர்கள் கலந்து கொண்டார்கள். ஆனால் பாலாவோடு நெருக்கமான நட்பில் இருந்த லைலாவும், பூஜாவும்(நான் கடவுள்) கலந்து கொள்ளவில்லை. பாலாவால் மறுவாழ்வு பெற்ற விக்ரமும் கலந்து கொள்ளவில்லை. விழாவிற்கு பிறகு இதுகுறித்து நடந்த நேர்காணல்களில் பாலா கூறும்போது " அவர்களுக்கு ஆயிரம் வேலையிருந்திருக்கும். யார் வராதது குறித்தும் எனக்கு வருத்தமில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் லைலா இதுகுறித்து விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: விழாவில் கலந்து கொள்ள பாலா சார் போனில் அழைப்பு விடுத்திருந்தார். நானும் கலந்து கொள்ள ஆர்வமாகத்தான் இருந்தேன். ஆனால் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வேண்டியதாக இருந்தது. இதனால் ஆந்திராவில் இருந்து என்னால் விழாவுக்கு வர முடியவில்லை.
பாலா சாரின் படங்களில் எனக்கு அற்புதமான கேரக்டர்கள் அமைந்தது. 'பிதாமகன்' படம் எனது கேரியரில் மிக முக்கியமான படம். அந்த படத்தில் நான் பேசிய வசனத்தை இப்போதும் ரசிகர்கள் மீம்சாக பயன்படுத்தி வருகிறார்கள். ரசிகர்கள் என்னை மறக்காமல் இருப்பதற்கு காரணமும் பிதாமகன் படம்தான். ரீ என்ட்ரியில் எனக்கு நல்ல கேரக்டர்கள் கிடைத்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. 'சப்தம்' படத்திற்காக நான் முதன் முறையாக தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நானே டப்பிங் பேசி இருக்கிறேன். என்கிறார்.