சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? | 'பெத்தி' படத்தில் வயதான தோற்றத்தில் ஜெகபதி பாபு | அஜித்குமாரின் பிறந்தநாளில் வெளியாகும் அஜித் ரேஸ் படம்! | கனவு நனவானது போல இருக்கிறது : நிதி அகர்வால் | பிளாஷ்பேக்: வெள்ளித்திரையில் வேற்று கிரகவாசிகளை காண்பித்த முதல் திரைப்படம் “கலைஅரசி” | 2025ல் கவனம் பெற்ற சிறிய படங்கள் | பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் |

100 கோடி ரூபாய் வசூலை தனது இரண்டாவது படத்திலேயே பெற்றிருக்கிறார் இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து. அவர் இயக்கிய முதல் படமான 'ஓ மை கடவுளே' படமும் வியாபார ரீதியாக வெற்றிப் படமாக அமைந்தது. இருந்தாலும் இரண்டாவது படத்தில் வளரும் நாயகனான பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைத்து 100 கோடி வசூலைப் பெற்றிருப்பது சாதாரண விஷயமல்ல.
தனது 'டிராகன்' படம் 100 கோடி வசூலைப் பெற்றதற்கு நன்றி தெரிவித்து, “அன்புள்ள ரசிகர்களே, என் குழுவிற்கு நீங்கள் அளித்த அனைத்து அன்புக்கும் 100 கோடி நன்றி. தனிப்பட்ட விதத்தில், வெளியீட்டிற்கு முன்பு சிலர் என்னுடைய தன்னம்பிக்கையை உடைக்க முற்பட்ட போது, 'நாங்க இருக்கோம் பார்த்துக்கலாம்' என்று சொன்ன உங்க எல்லோருக்கும் நன்றி. இந்த படத்தில் உள்ள தவறுகளை சரி செய்து, அடுத்த படத்தை சிறப்பாகத் தருவேன் என சத்தியம் செய்கிறேன்,” என அஷ்வத் மாரிமுத்து குறிப்பிட்டுள்ளார்.
'டிராகன்' படம் வெளியான 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்துள்ளது. இந்த ஆண்டில் 'விடாமுயற்சி' படத்திற்குப் பிறகு 100 கோடி வசூலைத் தந்த இரண்டாவது படம். ஆனால், லாபகரமான முதல் 100 கோடி படம் என்பது குறிப்பிடத்தக்கது. 'லவ் டுடே' படத்திற்குப் பிறகு தனது இரண்டாவது படத்தையும் 100 கோடி கிளப்பில் சேர்த்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அவர் நடித்து அடுத்து வெளியாக உள்ள 'லவ் இன்ஷுரன்ஸ் கார்ப்பரேஷன்' படமும் அப்படி வசூலித்தால் ஹாட்ரிக் 100 கோடி. நடக்குமா என பொறுத்திருப்போம்.