மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் சிவகுமார் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தபோது ரசிகர் ஒருவர் அவர் அனுமதி இன்றி செல்பி எடுக்க முயன்ற போது சிவகுமார் அவரது செல்போனை தட்டிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல நடிகர் மம்முட்டி ஒரு முறை பிரார்த்தனை செய்வதற்காக மசூதிக்குள் நுழைந்த போது செல்பி எடுக்க முயன்ற ஒரு இளைஞரிடமிருந்து செல்போனை பறித்து வைத்துக் கொண்டு தொழுகை முடிந்த பின்னர் அவர்களிடம் கொடுத்து அறிவுரை கூறி அனுப்பிய சம்பவமும் நடைபெற்றது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கூட விமான நிலையத்தில் இருந்து வெளிவந்த போது தன்னை அனுமதியின்றி படம் எடுக்க முயற்சித்த ரசிகரின் கையில் இருந்த செல்போனை தட்டி விட்டு சென்றார். சமீபகாலமாக இது போன்ற செல்போன் சம்பவங்கள் கொஞ்சம் குறைந்து இருந்து நிலையில் தற்போது மலையாள நடிகர் உன்னி முகுந்தன் இதுபோன்று ரசிகர் ஒருவரின் செல்போனை பறித்த சம்பவம் மீண்டும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் வெளியான 'கருடன்' படத்தில் வில்லனாக நடித்தவர் மலையாளம் நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் மட்டுமல்ல தெலுங்கு படங்களிலும் வில்லனாக நடித்துள்ள உன்னி முகுந்தன், சமீபத்தில் 'மார்கோ' என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். இதைத்தொடர்ந்து அவர் நடித்துள்ள கெட் செட் பேபி என்கிற திரைப்படம் இந்த வாரம் வெளியாகி உள்ளது. இதன் புரமோஷன் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கொச்சியில் இந்த படம் ஓடும் திரையரங்கு ஒன்றிற்கு விசிட் அடித்தார் உன்னி முகுந்தன். படத்தைப் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு ரசிகர்களுடன் கலந்துரையாடி கிளம்பி சென்றுள்ளார்.
ஆனால் இப்படி அவர் தியேட்டருக்குள் வரும்போது உடன் வந்த ஒரு ரசிகர் ஒருவர் உன்னி முகுந்தனின் முகத்திற்கு அருகில் செல்போனை கொண்டு சென்று அவரை வீடியோ எடுக்க முயற்சி செய்தார். இதனால் கோபமான உன்னி முகுந்தன் சட்டென அவரிடம் இருந்து மொபைல் போனை பறித்து தனது பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடந்து சென்றார். இது குறித்த வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படி நடிகர்களின் அனுமதி இல்லாமல் ரொம்பவே அத்துமீறலாக புகைப்படம் எடுக்கும் ரசிகர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ?