எனக்கு நீதி வாங்கித் தாங்க : மாதம்பட்டி ரங்கராஜ் பற்றி முதல்வரிடம் முறையிட்ட ஜாய் கிரிஸ்டலா | நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி | பராசக்தி படத்தில் ராணா நடிப்பதை உறுதிப்படுத்திய சிவகார்த்திகேயன் | மதராஸி - காந்தி கண்ணாடி படங்களின் மூன்று நாள் வசூல் எவ்வளவு? | அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ் | சிரஞ்சீவியுடன் இளமையான தோற்றத்தில் நடனமாடும் நயன்தாரா | கதையின் நாயகன் ஆனார் முனீஷ்காந்த் | வெனிஸ் திரைப்பட விழாவில் உலகின் கவனத்தை ஈர்த்த படம் | பிளாஷ்பேக்: 30 ஆண்டுகளுக்கு முன்பு கலக்கிய கோர்ட் டிராமா | பிளாஷ்பேக் : முதல் நட்சத்திர வில்லன் |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் மூலம் 2014ம் ஆண்டு தமிழ் சினிமாவில் தயாரிப்புத் துறையில் இறங்கியது லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம். இங்கிலாந்தில் மொபைல் நெட்வொர்க் துறையில் பெரும் நிறுவனமாக இருந்த லைகா மொபைல் நிறுவனம், திரைப்படத் தயாரிப்பில் இறங்கியது. இலங்கைத் தமிழரான சுபாஷ்கரன் தான் அந்த நிறுவனங்களின் தலைவர்.
தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களை அந்நிறுவனம் தயாரித்தது. ரஜினிகாந்த் நடித்த '2.0', மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 1,2' , ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2', ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்', அஜித் நடிப்பில் சமீபத்தில் வந்த 'விடாமுயற்சி' என சில பெரிய படங்களைச் சொல்லலாம். மேலே குறிப்பிட்ட படங்கள் அனைத்துமே பெரிய லாபத்தை நிறுவனத்திற்குத் தரவில்லை என்று கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
தற்போது மோகன்லால் நடித்துள்ள 'எல் 2 எம்புரான்' படத்தை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்த மாதம் 27ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
இது தவிர அவர்கள் அறிவித்த ஒரே படம் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாக உள்ள படம். அப்படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிப்பார் என்றார்கள். ஆனால், அப்படம் 'டேக் ஆப்' ஆகுமா என்பதில் சந்தேகம் நிலவி வருகிறது என்கிறார்கள். தொடர் தோல்விகளால் நிறுவனம் தத்தளித்து வருகிறதாம்.
இந்நிறுவனத்தின் படங்களை புரமோஷன் செய்ய சமூக வலைத்தள குரூப்களை வைத்திருந்தார்கள். அவற்றை சமீபத்தில் 'டெலிட்' செய்துவிட்டார்கள். எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் இந்த குரூப்பை ஆரம்பிக்கிறோம் என சொல்லி இருக்கிறார்கள். அதோடு, 'விடாமுயற்சி'க்காக புரமோஷன் செய்ததற்கான தொகையையும் இதுவரை தரவில்லையாம்.
பெரும் கனவுகளுடன் தமிழ் சினிமாவிற்கு வந்து பிரம்மாண்டமான படங்களைத் தயாரித்த சுபாஷ்கரன், தயாரிப்பு நிறுவனத்திற்கான சரியான ஆட்களைத் தேர்வு செய்யவில்லை என்று அனுபவம் வாய்ந்த திரைத் துறையினர் தெரிவிக்கிறார்கள். அதனால்தான் இந்நிறுவனத்திற்கு இப்படி ஒரு சோதனை ஏற்பட்டுள்ளது என்பது அவர்களது கருத்தாக உள்ளது. தமிழ் சினிமாவில் இனி, '2.0, பொன்னியின் செல்வன், இந்தியன் 3' போன்ற பிரம்மாண்டமான படங்களைத் தயாரிக்க யார் முன் வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.