மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
1967ல் சென்னையில் பிறந்தவர் மஞ்சு சர்மா. அவரது தந்தை தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி வந்தார். அதனால் மகளை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பினார். இதற்காக மகளுக்கு நடிப்பு பயிற்சியும், நடன பயிற்சியும் அளித்தார்.
கமலின் 'வாழ்வே மாயம்' படத்தில் தனது 14வது வயதில் குழந்தை நட்சத்திரமாக 'லிட்டில்' மஞ்சு எனும் பெயரில் அறிமுகமானார் . அதில் சாஸ்திரியின் உடல்நலம் பாதிக்கப்பட்ட மகளாக நடித்ததால் இவருக்கு வசனம் எதுவும் இல்லை. அதன்பின் கங்கை அமரன் இயக்கத்தில் 1983இல் வெளியான 'கொக்கரக்கோ' எனும் படத்தில் நாயகியாக அறிமுகமானர். அவரது பெயரை இளவரசி என்று மாற்றினார் கங்கை அமரன்.
ஸ்ரீவித்யாவின் தோற்றத்தில் இருந்த இளவரசியை ரசிகர்களுக்கு பிடிக்க தொடங்கியது. அதன்பிறகு குடும்ப பாங்கான படங்களில் நடிக்க ஆரம்பித்தார். மனைவி சொல்லே மந்திரம் என்ற படத்தில் நடிகர் பாண்டியனின் குப்பத்து மனைவியாக மெட்ராஸ் பாஷை பேசி நடித்தார். தாய்க்கு ஒரு தாலாட்டு, சட்டம், அலைபாயும் நெஞ்சங்கள், ஆலய தீபம், சிறை, வீட்டுக்கு ஒரு கண்ணகி, ஊமை விழிகள், 24 மணி நேரம், குங்குமச்சிமிழ், நான் பாடும் பாடல், ஜீவநதி, தாவணிக் கனவுகள், அவள் சுமங்கலி தான், சிதம்பர ரகசியம், சம்சாரம் அது மின்சாரம் உள்ளிட்ட படங்கள் அவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கவை.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும், இரண்டாவது வரிசை ஹீரோக்களுடன்தான் நடித்தார். இங்கு வாய்ப்புகள் குறையவே கல்பனா என்ற பெயரில் தெலுங்கிலும், கன்னடத்தில் மஞ்சுளா சர்மா என்ற பெயரிலும் ஏராளமான படங்களில் நடித்தார்.
2008க்கு பிறகு முழுமையாக திரையுலகில் இருந்து விலகிய இளவரசி, கோபால் என்கிற வங்கி அதிகாரியை திருமணம் செய்து கொண்டு ஒரே மகளோடு சென்னையில் வசித்து வருகிறார்.