2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

தமிழ் சினிமாவின் ஆரம்ப காலங்களில் பான் இந்தியா தயாரிப்பாளராக இருந்தவர் ஒய்.வி.ராவ். தமிழ், தெலுங்கு, இந்தி, கொங்கனி, உள்ளிட்ட பல மொழிகளில் படங்களை தயாரித்தார். சில படங்களை இயக்கவும் செய்தார். அவர் இயக்கிய முக்கியமான தமிழ் படம் 'லவங்கி'. முகலாயர்கள் ஆட்சி காலத்தில் ஒரு இந்து பண்டிதரை காதலித்து மணந்த முஸ்லிம் பெண்ணின் கதை.
இதில் பண்டிதராக ராவே நடித்தார். அவரை காதலிக்கும் பெண் லவங்கியாக குமாரி ருக்மணி நடித்தார். இந்த படத்தில் நடிக்கும்போதே இயக்குனர் ராவும், ருக்மணியும் நிஜமாகவே காதலித்தார்கள். பின்னர் இருவரும் திருணம் செய்து கொண்டார்கள். இந்த தம்பதிகளுக்கு பிறந்தவர் தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமி.
லவங்கி படத்தில் பி.ஆ.பந்துலு, பி.எஸ். ஜெயம்மா, விஞ்சாமுரி வரதராஜ அய்யங்கார், கே.ஆர். ஜெயகௌரி, டி.ஆர். ராமச்சந்திரன், கே.சாரங்கபாணி, கே.ஆர். செல்லம் உள்பட பலர் நடித்தனர். ஜித்தன் பேனர்ஜி என்ற வங்கமொழி ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்தார், சுப்பாராமன், பாபநாசம் சிவன் இசை அமைத்தனர். ருக்மணியும், ராவும் இணைந்து இரண்டு பாடல்களை பாடி இருந்தார்கள். 1946ம் ஆண்டு வெளியான படம் பெரிய வரவேற்பை பெறவில்லை.