யாரிடமும் உதவி கேட்காதீங்க : செல்வராகவன் | தாலாட்டுதே வானம்... என தாலாட்டி சென்ற ஜெயச்சந்திரனின் பிறந்தநாள் இன்று! | பாலா விழாவில் கலந்து கொள்ளாதது ஏன்? லைலா விளக்கம் | போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. முதல் பாகத்தை விட இன்னும் பெரிய வெற்றியைப் பெற்று இந்தியாவிலேயே அதிகம் வசூலித்த படமாக கிட்டத்தட்ட 1800 கோடிக்கு மேல் வசூலித்தது. அது மட்டுமல்ல தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் வெளியாகி வட மாநிலங்களிலும் இந்த படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.
ஓடிடி தளத்தில் வெளியான போது ஆங்கில மொழியிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியான புஷ்பா 2 படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஓடிடி நிறுவனத்தினர் போர்ச்சுகீஸ், இந்தோனேசியா, போலிஷ் (போலந்து), ஸ்பானிஷ் மற்றும் தாய்(லாந்து) என ஐந்து மொழிகளில் ஆங்கில சப் டைட்டில்களுடன் ஓடிடியில் புஷ்பா 2வை வெளியிட்டுள்ளனர். இதனால் இந்த படம் இன்னும் அதிக அளவிலான ரசிகர்களை சென்றடைய வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமல்ல அடுத்தடுத்து வெளியாக இருக்கும் அல்லு அர்ஜுன் படங்களுக்கு மிகப்பெரிய மார்க்கெட் வேல்யூவையும் உருவாக்கித் தரும் என்பதிலும் சந்தேகம் இல்லை.