மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

35 வருடங்களை தாண்டி தமிழ் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டு இயக்குனராகவும் நடிகராகவும் வெற்றிகரமாக இரட்டைக் குதிரை சவாரி செய்து வருபவர் இயக்குனர் பார்த்திபன். ஒரு பக்கம் இயக்குனராக வித்தியாசமான படைப்புகளை தந்து, சில சமயம் சறுக்கலை சந்தித்தாலும் இன்னொரு பக்கம் நடிகராக அதை சமன் செய்து தொடர்ந்து பயணப்பட்டு வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் தற்போது கவனம் செலுத்த துவங்கியுள்ளார் பார்த்திபன். இதற்குமுன் 2012ல் தெலுங்கில் ராம்சரண் நடிப்பில் வெளியான 'ரச்சா' என்கிற படத்தில் மட்டும் நடித்துள்ள பார்த்திபன் தற்போது இரண்டு தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அது மட்டுமல்ல கடந்த 2001ல் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் வெளியான 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக' என்கிற படத்தின் மூலம் மலையாளத்தில் நுழைந்த பார்த்திபன், அவர் பிறகு 2011ல் வெளியான 'மேல் விலாசம்' என்கிற படத்தில் கதையின் நாயகனாகவும் 2013ல் வெளியான 'எஸ்கேப் பிரம் உகாண்டா' படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த நிலையில் 12 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். அந்த படத்திற்கு 'மிஸ்டர் டுமீல்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.