நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் அதர்வா தமிழ் சினிமாவில் ‛பாணா காத்தாடி' படம் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பரதேசி, ஈட்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வளர்ந்து வரும் இளம் தலைமுறை நடிகர்களில் ஒருவராக உள்ளார். தற்போது டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முதல்முறையாக இயக்கி வரும் படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார்.
இன்று(பிப்., 13) இப்படத்திற்கு 'இதயம் முரளி' என தலைப்பு வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் முரளியின் அடையாளமாக இதயம் படம் உள்ளது. அதையே இப்போது படத்திற்கு தலைப்பாக்கி உள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இதில் நட்டி நட்ராஜ், பிரீத்தி முகுந்தன், கயாடு லோகர், பிரக்யா நக்ரா, ரக் ஷன், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் அறிமுக டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். 5 நிமிடம் ஓடக்கூடிய அந்த டீசரில் அதர்வாவின் காதல், காதல் பிரேக்-அப் மாதிரியான விஷயங்கள் உள்ளன. மேலும் இந்த உலகத்தில் பெஸ்ட் லவ்வர் ரோமியோவோ, மஜ்னுவோ, அம்பிகாபதியோ... ஏன் டைட்டானிக் ஜாக் கூட இல்ல... நம்ம இதயம் முரளி தான்டா என்ற வசனம் உள்ளது. இதை வைத்து பார்க்கையில் படம் முழுக்க முழுக்க காதல் கதை என புரிந்து கொள்ள முடிகிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட இந்த டீசர் தற்போது வைரலாகி வருகிறது.
டீசர் லீங்க் : https://www.youtube.com/watch?v=kdvlqnNqUVU