சிரஞ்சீவியிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா | பிளாஷ்பேக்: “பராசக்தி”க்கு முன் வெளிவர இருந்த சிவாஜியின் “பூங்கோதை” | அப்பா படத்தையடுத்து மகன் படத்தின் அப்டேட் | ‛ஜனநாயகன்' இசை வெளியீட்டு விழா உறுதி : எங்கே தெரியுமா? | மீண்டும் ‛டக்கர்' பட இயக்குனருடன் கைகோர்த்த சித்தார்த்! | ராஜமவுலி, மகேஷ் பாபு படத்தில் இணைந்து நடித்துள்ள கணவர், மனைவி! | ‛ரெட்ட தல' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | ரஜினி, அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சம்பளத்துக்கு கட்டுப்பாடு? தயாரிப்பாளர் சங்கம் அதிரடி | சைபர் கிரைம் போலீஸில் அனுபமா பரமேஸ்வரன் புகார் | சம்பளத்தை உயர்த்திய நடிகர் மீது தயாரிப்பாளர்கள் அதிருப்தி |

தமிழில் இளம் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான அட்லி, ஹிந்தியில் ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்தை இயக்கி 1000 கோடிக்கும் அதிகமான வசூல் பெறக் காரணமாக இருந்தார். அவரது இயக்கத்தில் பல பாலிவுட் நடிகர்கள் நடிக்க ஆர்வமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் அட்லியின் அடுத்த படத்தில் சல்மான் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. அப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமல்ஹாசனும் சம்மதித்துவிட்டார் என்றார்கள். இதனிடையே, படத்தின் ஸ்கிரிப்ட் மற்றும் பட்ஜெட்டை முடித்து பார்த்த போது 400 கோடிக்கும் அதிகமாக செலவாகும் என்று தெரிய வந்துள்ளது. சல்மான் கான் நடித்தால் அவ்வளவு பட்ஜெட் செலவு செய்து வசூலைப் பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், அல்லு அர்ஜுனை நடிக்க வைக்கலாமா என்று யோசித்து வருகிறார்களாம்.
அட்லி - அல்லு அர்ஜுன் சந்திப்பு கடந்த வருடமே நடந்தது. 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க பேச்சு வார்த்தைகள் நடந்தன. பின்னர் அதிலிருந்து அல்லு அர்ஜுன் பின்வாங்கிவிட்டார். தற்போது மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
அட்லியின் இயக்கத்தில் நடிக்கப் போவது சல்மானா, அல்லுவா என்பது விரைவில் தெரிந்துவிடும்.