போஸ்ட் புரொக்ஷன் ஸ்டூடியோ திறந்தார் ஏ.எல்.விஜய் | பிளாஷ்பேக் : வெளிமாநிலத்தில் வெள்ளி விழா கொண்டாடிய முதல் படம் | பிளாஷ்பேக் : 10 வருட இடைவெளியில் படமாக உருவான ஒரே கதை | நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவு | என் மடியில் வளர்ந்த சிறுவன் இன்று பான் இந்திய ஸ்டார் ; நடிகர் பாபு ஆண்டனி பெருமிதம் | ஜூனியர் குஞ்சாக்கோ போபனாக நடித்தவர் அவருக்கே வில்லனாக மாறிய அதிசயம் | நான் அவள் இல்லை ; டீப் பேக் வீடியோ குறித்து வித்யா பாலன் எச்சரிக்கை | இன்ஸ்டாகிராம் புரமோஷனை கூட தவிர்க்கும் இளம் நடிகை ; இயக்குனர் விரக்தி | முடக்கப்பட்ட எக்ஸ் தளத்தை மீட்க முடியாமல் தவிக்கும் ஸ்ரேயா கோஷல் | அஜித்தின் 'விடாமுயற்சி', 'குட் பேட் அக்லி' பட டீசர்களுக்கு இடையே இப்படி ஒரு வித்தியாசமா? |
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் நடிகர் ரியோ ராஜ். பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, ஜோ ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் 'ஸ்வீட் ஹார்ட்' எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனை அறிமுக இயக்குனர் ஸ்வினீத் எஸ். சுகுமார் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் கதாநாயகியாக சுழல் வெப் தொடரில் நடித்த கோபிகா ரமேஷ் நடிக்கின்றார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இப்போது படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி இத்திரைப்படம் வருகின்ற மார்ச் 14ம் தேதி அன்று திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இளைஞர்களை கவரும் விதமாக காதல் கதையில் இந்தப்படம் உருவாகி உள்ளது.