எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
தமிழ் திரையுலகின் முதல் உச்ச நட்சத்திரங்களாக அறியப்பட்ட எம் கே தியாகராஜ பாகவதர் மற்றும் பி யு சின்னப்பா காலம் தொட்டு, மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்ட பல மேடை நாடகங்கள் சினிமா என்ற செல்லுலாய்டு சிற்பங்களாக உருமாறி மாபெரும் வெற்றியை சுவைத்தும் இருக்கின்றன. படு தோல்வியைத் தழுவியும் இருக்கின்றன. அப்படி பல மேடை நாடகங்கள் பின்னாளில் வந்த எம் ஜி ஆர், சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோரின் காலங்களிலும் திரைப்படங்களாக வெளிவந்து வெற்றி தோல்வியை சந்தித்திருக்கின்றன.
வெற்றி பெற்ற ஒரு மேடை நாடகம் சினிமாவாக எடுக்கப்பட்டு அது ரசிகர்களிடம் சரியாக சென்றடையாமல் தோல்வியைத் தழுவும் பட்சத்தில், அந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகரின் 'இமேஜ்' ஒரு காரணமாக சொல்லப்படுவதுண்டு. உதாரணத்திற்கு ராஜா ராணி கதைகளில் மட்டுமே அதிகமாக நடித்து, தனக்கென ஒரு இமேஜை உருவாக்கி வைத்திருந்த ஒரு நடிகரை திடீரென ஒரு சமூகக் கதையின் நாயகனாக காட்ட முயற்சிக்கும் போது, அங்கு அவரது 'இமேஜ்' பாதிக்கப்பட்டு படம் தோல்வியடைகின்றது. அப்படி ஒரு நிலை சினிமா தோன்றிய ஆரம்ப காலங்களிலேயே நிகழ்ந்துமிருக்கின்றது.
1935ல் “டம்பாச்சாரி” என்ற பெயரில் ஒரு சமூகப் படம் வெளிவந்தது. மேடை நாடகமாக அரங்கேறி வெற்றிகளைக் கண்டு, பின் திரைப்படமாக வந்ததுதான் இந்த “டம்பாச்சாரி” திரைப்படம். உண்மையில் ஒரு பணக்காரனின் வாழ்க்கையில் நடந்த கதை என்று சொல்லப்படுகின்றது. திருவொற்றியூர் காசி விஸ்வநாத முதலியார் எழுதிய நாடகமான இதில், தாந்தோன்றித் தனமாகச் செலவு செய்வது, வறட்டு கவுரவம் பார்ப்பது, கட்டிய மனைவியை விட்டு தாசி வீடே கதியெனக் கிடப்பது போன்ற தீய செயல்களை நகைச்சுவையோடு எடுத்துக் காட்டியிருக்கும் இந்த நாடகம். பாலாமணி என்ற நடிகைதான் இந்த நாடகத்தை நடத்தி வந்தார்.
பெண்களே அதிகமாக இருந்த இந்த நாடகக் குழுவில் பாலாமணி அம்மையார் கதாநாயகியாகவும், பாலாம்பாள் என்பவர் கதாநாயகனாகவும் நடிப்பர். தஞ்சை மாவட்டத்தில் இந்த நாடகத்திற்கென ஒரு தனிப்பெரும் புகழ் இருந்தது. இந்த நாடகக் காட்சி நேரத்தில் தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் புறப்படும் ரயிலுக்கு “பாலாமணி ஸ்பெஷல்” என்று பெயரிடப்பட்டிருந்ததாம். 'பாலாமணி சாந்து', 'பாலாமணி புடவை' என்றெல்லாம் வியாபார பொருட்களுக்குக் கூட பெயர் வைக்கும் அளவிற்கு சிறப்புப் பெற்றிருந்தார் இந்த நாடகத்தை நடத்தி வந்த நடிகை பாலாமணி.
“டம்பாச்சாரி” என்ற இந்த நாடகம் ஒரு சமூக நய்யாண்டித் திரைப்படமாக உருவானபோது அதில் நாயகனாக எம் ஆர் கிருஷ்ணமூர்த்தி என்பவரும், நாயகியாக பி எஸ் ரத்தினபாய் என்பவரும் நடித்திருந்தனர். நாயகன் நாயகியாக நடித்திருந்த இவ்விருவரும் பெரும்பாலான புராணப் படங்களில் கடவுளர்களாக தோன்றி நடித்து வந்ததன் விளைவு, அவர்கள் சமூகக் கதாபாத்திரங்கள் ஏற்று நடித்திருந்ததை ரசிகர்களால் ஏற்க இயலாமல் போனது. இன்றும் நடிகர் நடிகைகள் குறித்து வளர்ந்து வரும் 'இமேஜ்' என்ற கட்டமைப்பு சினிமா தோன்றிய ஆரம்ப காலங்களிலேயே தோன்றி ஒரு படத்தையே தோல்வியுறச் செய்திருக்கிறது. நாடக மேடையில் வெற்றிக் கொடி நாட்டிய “டம்பாச்சாரி” திரைப்படமாக வெளிவந்து போதிய வரவேற்பின்றி பெட்டிக்குள் சுருண்டு கொண்டது.