ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! | சூர்யா 45வது படத்தில் வில்லன் வேடத்தில் மன்சூர் அலிகான்! | எஸ்.எஸ்.ராஜமவுலி, மகேஷ் பாபு படத்திற்காக பிரியங்கா சோப்ராவின் சம்பளம் எவ்வளவு? | நாளை வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் படத்தின் முக்கிய அறிவிப்பு! | அஜித்குமார் உடல் எடையை குறைத்தது எப்படி! - சீக்ரெட்டை வெளியிட்ட ஆரவ் | திரைக்கு வந்து ஒன்பது நாட்களில் 13 கோடிக்கு மேல் வசூலித்த குடும்பஸ்தன்! | வேட்டையன் வில்லன் ராணாவை இயக்கும் பி.எஸ்.மித்ரன்! |
100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட மலையாள நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் முதல்முறையாக டைரக்ஷனில் இறங்கி மோகன்லாலை வைத்து லூசிபர் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அரசியல் பின்னணியுடன் உருவாகி இருந்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்று மலையாளத்தில் முதல் 200 கோடி வசூலித்த படம் என்கிற பெருமையை பெற்றது. அதன் பிறகு பிரித்விராஜ் ஒரு பக்கம் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் நடித்துக் கொண்டு இன்னொரு பக்கம் டைரக்ஷனிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக ஏற்கனவே அவர் அறிவித்திருந்தபடி மோகன்லாலை வைத்து தற்போது எம்புரான் படத்தை இயக்கி முடித்து விட்டார். வரும் மார்ச் 27ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியானது. இந்த நிலையில் சலார் படத்தில் பிரித்விராஜூடன் இணைந்து நடித்த நடிகர் பிரபாஸ் எம்புரான் டீசருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எம்புரான் டீசரை பார்த்தேன். உண்மையிலேயே உலகத்தரத்தில் இருக்கிறது. பிரமிப்பாக படமாக்கப்பட்டுள்ளது. ஒன் அண்ட் ஒன்லி மோகன்லால் சார் நடிப்பில், என்னுடைய சொந்த வரதாவின் இயக்கத்தில்.. (பிரித்விராஜ் சலார் படத்தில் வரதராஜ மன்னர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்). மொத்த படக்குழுவுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.