15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு |
நாசர் தலைமையிலான புதிய நிர்வாகிகள் தேர்வான பிறகு 2016ம் ஆண்டு நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட பணிகள் தொடங்கியது. சுமார் 35 கோடியில் இந்த கட்டிடத்தை கட்ட தீர்மானிக்கப்பட்டது. திரையரங்கம், திருமண மண்டபம், ஒளிப்பதிவு கூடங்கள், ஒலிப்பதிவு கூடங்கள், உடற்பயிற்சி கூடங்கள். நடிப்பு பயிற்சி மையம் ஆகியவை கட்ட தீர்மானிக்கப்பட்டது.
60% கட்டிடப் பணிகள் முடிவடைந்த நிலையில் நடிகர் சங்கம் தேர்தல் தொடர்பான வழக்குகள், பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் தடைபட்டது. தற்போது வழக்குகள் முடிந்து நாசர் தலைமையிலான நிர்வாகிகள் மீண்டும் பொறுப்பேற்ற பிறகு கட்டிட பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. திட்டமிட்டதை விட கூடுதலாக 50 கோடி வரை செலவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த நிலையில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர் பூச்சி முருகன் ஆகியோர் கட்டிடப் பணிகளை பார்வையிட்டனர். பின்னர் இன்ஜினியர்களுடன் ஆலோசனை நடத்தினர். வருகிற ஏப்ரல் மாதம் கட்டிடத்தை திறக்க ஏற்பாடு செய்ய முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
========