மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
1943ம் ஆண்டு ஜெமினி ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்ட படம் 'மங்கம்மா சபதம்'. ரஞ்சன் வசுந்தரா தேவி, என்எஸ் கிருஷ்ணன், டி.ஏ மதுரம் உள்பட பலர் நடித்திருந்தனர். ஆச்சாரியா இயக்கினார். எஸ் ராஜேஸ்வரராவ் எம்பி பார்த்தசாரதி இசையமைத்தனர்.
கிராமத்து பெண்ணான மங்கம்மா அந்த நாட்டின் இளவரசனால் அவமானப்படுத்தப்படுகிறாள். அவனைத் திருமணம் செய்து, அவனுக்கு ஒரு குழந்தையை பெற்று, அந்த குழந்தையை கொண்டு அவனை பழி வாங்குவேன் என சபதம் செய்கிறாள். அந்த சபதத்தை அவள் எப்படி நிறைவேற்றினாள் என்பது தான் படத்தின் கதை.
எளிமையான இந்த கதை படத்தின் திரைக்கதையால் பெரும் வெற்றி பெற்றது. சுமார் 7 லட்சத்தில் உருவான இந்த படம் 40 லட்சம் வசூலித்து சாதனை படைத்தது. இன்றைய மதிப்பீட்டில் 600 கோடி. இந்தப் படம் இந்தியிலும், தெலுங்கிலும் 'மங்களம்' என்ற பெயரில் ரீமேக் ஆனது. 1965 ஆம் ஆண்டு மீண்டும் தெலுங்கில் ரீமேக் ஆனது. சிங்களத்திலும் ரீமேக் ஆனது.