ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
'தடம்' படத்தின் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துள்ள படம் 'விடாமுயற்சி'. பிப்ரவரி 6ம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தில் திரிஷா, அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் டீசர், டிரைலர் ஏற்கனவே வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், மகிழ் திருமேனி, படத்தின் புரமோஷனுக்காக பல ஊடகங்களில் பேட்டியளித்து வருகிறார். அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: 'விடாமுயற்சி' படத்தில் அஜித்க்கு பிரமாண்ட அறிமுக எண்ட்ரி சீன் கிடையாது, பஞ்ச் டயலாக் எதுவும் பேச மாட்டார், பயங்கர பில்டப் உடனான இன்டர்வெல் காட்சி கிடையாது. 'விடாமுயற்சி' படத்தை திறந்த மனதுடன் பார்க்க வாருங்கள். அனைவரையும் திருப்திப்படுத்தும். முழு திரைப்படத்தையும் பார்த்த அஜித், படம் இந்தளவிற்கு சிறப்பா வரும்னு நினைக்கவில்லை என்றார்.
விடாமுயற்சியின் படப்பிடிப்பு தொடர்ந்து 2 ஆண்டுகள் நடைபெற்றதை போன்ற பிம்பம் ஏற்பட்டது. மொத்த படப்பிடிப்பே 121 நாட்கள்தான் நடைபெற்றது. பாடல்கள், ஸ்டண்ட் தவிர்த்து 68 நாட்கள்தான் காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்றது. 'விடாமுயற்சி' கால தாமதம் காரணமாக 'குட் பேட் அக்லி' படப்பிடிப்பை ஆரம்பித்தார் அஜித். கார் பந்தய பணிகளுக்காக அதற்கு முன்பாகவே இருபடங்களிலும் நடித்து முடிக்க வேண்டும் என ஒரே நேரத்தில் 2 படப்பிடிப்புகளில் தொடர்ந்து பங்கேற்றார். இரு படப்பிடிப்புக்கான பயண நேரத்தில் மட்டுமே அவர் ஓய்வெடுத்தார். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, அஜித்துடன் மீண்டும் ஒரு படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானதே, அது உண்மையா என கேட்க, ''ஆம், மீண்டும் அஜித்துடன் இணைவது பற்றி, அவரிடம் இருந்தே அறிவிப்பு வரும். அதுவரை நான் காத்திருக்கிறேன்'' என பதிலளித்தார் மகிழ் திருமேனி.