'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை | பிளாஷ்பேக் : மம்முட்டி கேரக்டரில் நடித்த சிவகுமார் | பிளாஷ்பேக் : வாய்ப்புக்காக பிச்சைக்காரர் தோற்றத்திற்கு மாறிய ஜெமினி கணேசன் | இந்த வாரமும் ஐந்திற்கும் மேற்பட்ட படங்கள் ரிலீஸ் | காந்தாரா பாணியில் உருவாகும் 'கரிகாடன்' | அனுமனை இழிவுபடுத்தி விட்டார் : ராஜமவுலி மீது போலீசில் புகார் | என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை |

கடந்த 2016ம் ஆண்டு சந்தானம் நடித்து வெற்றி பெற்ற படம் தில்லுக்கு துட்டு. அதன் பிறகு 2019ம் ஆண்டு வெளியான அப்படத்தின் இரண்டாம் பாகமும் வெற்றி பெற்றது. பின்னர் 2023ல் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்தார். இது சந்தானத்தின் 125வது படமாகும். அதையடுத்து மீண்டும் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற படத்தில் நடித்து வந்தார் சந்தானம்.
இப்படத்தில் அவருடன் இயக்குனர்கள் கவுதம் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, மொட்டை ராஜேந்திரன், யாஷிகா ஆனந்த், கீர்த்திகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இதை ஒரு புகைப்படத்துடன் படக்குழு அறிவித்துள்ளனர். மேலும் இந்த படத்தை மே மாதம் ஒன்றாம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இதே தேதியில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ரெட்ரோ என்ற படமும் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது .