ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
சுந்தர் சி இயக்கத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் நடித்து 12 வருடங்களாக கிடப்பில் கிடந்த 'மதகஜராஜா' படம் சமீபத்தில் பொங்கலுக்கு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இதனால் கிடப்பில் கிடந்த பல தமிழ் படங்களை தூசி தட்டி வெளியிடும் முயற்சிகள் நடக்கின்றன. குறிப்பாக கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தீவிரமான வேலைகள் நடக்கின்றன. கவுதம் மேனன் கூட இந்த படத்தை மே மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த வரிசையில் கடந்த 6 வருடங்களாக கிடப்பில் இருந்த படம் 'படவா'. கே.வி.நந்தா இயக்கியுள்ள இப்படத்தில் விமல், ஸ்ரிதா ராவ், கே.ஜி.எப் ராம் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். சில பிரச்னைகளால் வெளியாகாமல் இந்த படம் உள்ளது. காதலும், காமெடியும் கலந்த படமாக உருவாகி உள்ளது. இப்படம் பிப்ரவரி 14ம் தேதி அன்று திரைக்கு வருகிறது என அறிவித்துள்ளனர்.