வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் |
‛சர்கார், சிவா, ரத்த சரித்திரம்' ஆகிய படங்களை இயக்கியவர் ராம் கோபால் வர்மா. கடந்த சில வருடங்களாக இவர் சர்ச்சைக்குரிய படங்களை இயக்கி வருகிறார். குறிப்பாக சினிமாவில் பீ கிரேட் தரம் கொண்ட படங்களை இயக்கி வந்தார். அது அல்லாமல் பெரும்பாலும் சினிமா துறையில் நடைபெறும் விஷயங்களுக்கு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் சமீபகாலமாக ராம் கோபால் வர்மா மீண்டும் தரமான படங்களை இயக்கி கம்பேக் தரவேண்டும் என்கிற கனவோடு உள்ளதாக கூறப்பட்டது. தற்போது இதற்கான முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் ராம் கோபால் வர்மா அடுத்து ஒரு பான் இந்திய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டுள்ளார். இதில் கதாநாயகனாக தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் டகுபதி நடிக்கின்றார். மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் சேதுபதி, அமிதாப்பச்சன் போன்ற நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.