லிப்லாக் காட்சிகளுக்கு 'நோ' சொல்கிறார் நிதி அகர்வால் | 2டி நிறுவனம் படத்தயாரிப்பை நிறுத்தியதா? | இளையராஜா பேரன்: இசையமைப்பாளர் ஆவது எப்போது? | ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து திரைக்கு வந்த படம் ‛ஜெயிலர்'. 650 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வரும் ரஜினி, வருகிற மார்ச் மாதத்தில் இருந்து ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கப் போகிறார். இந்த படத்தின் ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் தற்போது இந்த படம் குறித்த ஒரு புதிய தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல இந்திய மொழிகளில் வெளியாகும் நிலையில், ஆங்கில மொழியிலும் வெளியிடப்பட உள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் ரஜினியின் முந்தைய படங்களை விட அதிகப்படியான நாடுகளில் இந்த படத்தை வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.