ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | புகையிலை விளம்பரத்திற்கு ரூ.40 கோடி: தைரியமாக மறுத்த சுனில் ஷெட்டி | ‛பருத்திவீரன்' புகழ் பாடகி லட்சுமி அம்மாள் காலமானார் | 2026லாவது அஜித் படம் வருமா | அண்ணா சாலை இரும்பு பாலத்திற்கு சிவாஜி பெயர் : ரசிகர்கள் வேண்டுகோள் | 2025ல் தமிழ் சினிமாவில் மறைந்த திரைப்பிரபலங்கள் | ஜனவரி 16ல் ஜூலிக்கு திருமணம்: பல வருட காதலரை மணக்கிறார் | திடீரென மேலாளரை நீக்கிய விஷால் | பிளாஷ்பேக்: பாடல்கள் இல்லாத 'வண்ணக் கனவுகள்' | பிளாஷ்பேக் : ஜெமினி கணேசனுக்கு வில்லனாக நடித்த சிவாஜி கணேசன் |

ஏவிஎம் தயாரிப்பில் ஏராளமான படங்களில் நடித்தவர் ரஜினி. ஆனால் அவர் நடிக்க மறுத்த படம் 'போக்கிரி ராஜா'. தெலுங்கில் அப்போது வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற 'சுட்டுலனுரு ஜகர்தா' என்ற படத்தின் ரீமேக் உரிமத்தை பெற்றிருந்த ஏவிஎம் சரவணன், அதனை ரஜினியை நடிக்க வைத்து தயாரிக்க விரும்பினார். இது தொடர்பாக அவர் ரஜினியை தொடர்பு கொண்டு பேசிய சரவணன் அந்த படத்தில் நடிக்க அழைத்தார். ஆனால் தெலுங்கு படத்தை பார்த்த ரஜினி இந்த படம் தனக்கு செட் ஆகாது. படத்தின் கதையில் தனக்கு பெரிய ஈர்ப்பு இல்லை என்று கூறிவிட்டார்.
உடனே ஏவிஎம் சரவணன் விசுவை அழைத்து இந்த படத்தின் கதையை ரஜினிக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொடுங்கள் என்றார். உடனே விசுவும் தெலுங்கு கதையில் பல மாற்றங்களை செய்தார். குறிப்பாக ராதிகா நடித்த கேரக்டர் தெலுங்கு படத்தில் ரொம்பவே சிறியது. அதை பெரிய கேரக்டராக மாற்றி இரண்டு ஹீரோயின்கள் கதையாக மாற்றினார். நறுக்கான வசனங்களை எழுதினார். பின்னர் மாற்றப்பட்ட கதையை ரஜினியிடம் கொடுத்தபோது உடனே நடிக்க ஒப்புக் கொண்டார்.
இந்த படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கினார். ரஜினியுடன் ஸ்ரீதேவி, ராதிகா நடித்தனர். பாபு ஒளிப்பதிவு செய்தார். எம்.எஸ்.விஸ்நாதன் இசை அமைத்தார். இந்த படத்தில் முத்துராமன் வில்லனாக நடித்தார். அவர் நடித்த கடைசி படமும் இதுதான். இந்த படத்தில் நடித்து முடித்து விட்டு ஊட்டியில் ஓய்வுக்காக சென்ற இடத்தில்தான் முத்துராமன் மறைந்தார். படத்தில் இன்னொருவர் அவர் குரலில் டப்பிங் பேசினார்.




