சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

நடிகர் விஜய் தனது 69வது படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு முழு நேர அரசியலில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளார். இந்தநிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழும் த்ரிஷாவும் விரைவில் நடிப்புக்கு முழுக்கு போடப்போவதாக தகவல் உலா வருகிறது.
தற்போது தமிழில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, தக்லைப் போன்ற படங்களில் நடித்துள்ள திரிஷா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் சூர்யா 45 வது படத்தில் நடித்து வருகிறார். அதோடு, மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நேரத்தில் கைவசம் உள்ள படங்களோடு நடிப்புக்கு அவர் முழுக்குப் போடப்போவதாகவும், சினிமாவை விட்டு வெளியேறும் த்ரிஷா, விஜய்யுடன் இணைந்து அரசியலில் பயணிக்க திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
இதுபற்றி விசாரிக்க த்ரிஷாவின் அம்மா உமாவை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறுகையில், ‛‛அந்த செய்தி உண்மையல்ல, தொடர்ந்து த்ரிஷா நடிப்பார்'' என்றார்.