துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை | அமெரிக்காவிலிருந்து புதிய கதையுடன் சென்னை திரும்பிய கமல் | 100 கோடியைக் கடந்த 'ஸ்கை போர்ஸ்' | 'என் இனிய பொன் நிலாவே' பாடல் : இளையராஜாவுக்கு உரிமையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு | 'பராசக்தி' தலைப்பு தொடரும் சிக்கல் ? | பொங்கல் படங்களில் தாக்குப் பிடிக்கும் 'மத கஜ ராஜா' |
நடிகை ராஷ்மிகா மந்தனா குறுகிய காலத்தில் தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் அளவிற்கு பிரபலமான நடிகையாக மாறிவிட்டார். கடந்த வருடம் ஹிந்தியில் அவர் நடித்த 'அனிமல்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனால் ஹிந்தியில் அவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகள் தேடி வருகின்றன. கடந்த வருட இறுதியில் வெளியான 'புஷ்பா 2' திரைப்படமும் ராஷ்மிகாவுக்கு வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் அடுத்ததாக மீண்டும் ஹிந்தியில் அவர் நடித்துள்ள வரலாற்றுப் படமான 'ச்சாவா' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
விக்கி கவுசல் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை லக்ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். சத்ரபதி சிவாஜியின் மகனான சத்ரபதி சாம்பாஜி மன்னனை பற்றிய வாழ்க்கை வரலாறாக இந்த படம் உருவாகியுள்ளது. சாம்பாஜியாக விக்கி கவுசல் நடிக்க அவரது மனைவி மகாராணி ஏசுபாயாக ராஷ்மிகா நடித்துள்ளார். அவுரங்கசீப் கதாபாத்திரத்தில் அக்சய் கண்ணா நடித்துள்ளார். நேற்று இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்கனவே தனது காலில் அடிபட்டு கடந்த சில நாட்களாக ஓய்வு எடுத்து வரும் ராஷ்மிகா நடக்க முடியாத நிலையிலும் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டார்.
இந்த படம் குறித்து அவர் பேசும்போது, “கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இயக்குனர் லட்சுமணனிடம் பேசிக் கொண்டிருந்தேன். இந்த ஒரு படம் போதும்.. இதற்கு பிறகு நான் சந்தோசமாக ஓய்வு பெற்று விடுவேன் என்று சொன்னேன்.. அந்த அளவிற்கு என் வாழ்நாளில் என் விருப்பமாக கேட்கக்கூடிய ஒரு படமாக இது அமைந்துவிட்டது. படத்தின் டிரைலரை பார்க்கும்போது விக்கி கவுசல் கிட்டத்தட்ட ஒரு கடவுள் போலவே காட்சியளிக்கிறார். அவர்தான் ச்சாவா” என்று நெகிழ்வுடன் கூறியுள்ளார் ராஷ்மிகா.