ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
கடந்த 20 வருடங்களாக தமிழ், தெலுங்கில் மட்டுமே படம் இயக்கி வந்த கவுதம் மேனன் முதன்முறையாக தனது தந்தை மொழியான மலையாளத்தில் மம்முட்டியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி உள்ளார். 'டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மம்முட்டியே இந்த படத்தை தயாரித்துள்ளார். வரும் ஜனவரி 23ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.
கவுதம் மேனன் திரையுலக பயணத்திலேயே இவ்வளவு விரைவாக ஒரு படம் எடுக்கப்பட்டு ரிலீஸ் ஆகிறது என்பது இந்த படமாக தான் இருக்கும். அது மட்டுமல்ல டாக்டர் நீரஜ் ராஜன் என்பவர் எழுதிய டோமினிக் என்கிற நாவலைத்தான் அப்படியே படமாக்கி இருக்கிறார் கவுதம் மேனன். இந்த படத்திற்கான திரைக்கதையையும் வசனத்தையும் கவுதம் மேனனுடன் இணைந்து டாக்டர் நீராஜ் ராஜன் அவரது சகோதரர் சூரஜ் ராஜன் இருவரும் எழுதியுள்ளனர்.