டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஒரே பாகமாக ரீ ரிலீஸ் ஆகும் பாகுபலி |
நடிகர் விஷால் நடிப்பில் கட்நத சில ஆண்டுகளில் தொடர்ந்து வெளியான படங்கள் சறுக்கலை சந்திக்க, கடந்த 2023ல் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அந்த மகிழ்ச்சியை இன்னும் அதிகப்படுத்தும் விதமாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே சுந்தர் சி இயக்கத்தில் அவர் நடித்து உருவாகி சில பிரச்னைகளால் கிடப்பில் போடப்பட்டிருந்த மத கஜ ராஜா திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதனால் விஷால் முன்பை விட உற்சாகமாகியுள்ளார்.
இந்த நிலையில் இவர் அடுத்ததாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்கப் போவதாக கூறி வந்தார். அதேசமயம் இன்னொரு பக்கம் அதற்கு முன்பாகவே இயக்குனர் கவுதம் மேனன் டைரக்ஷனில் தான் ஒரு படம் நடிக்க இருப்பதாக நேற்றைய மத கஜராஜா நன்றி தெரிவிக்கும் சந்திப்பில் அதிகாரப்பூர்வமாக கூறினார் விஷால். அது மட்டுமல்ல இயக்குனர் அஜய் ஞானமுத்து டைரக்ஷனிலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம்.
ஏற்கனவே இயக்குநர் சுந்தர்.சியுடன் ஆம்பள, ஆக்ஷ்ன் ஆகிய படங்களில் நடித்த விஷால் தற்போது மத கஜ ராஜாவும் வெளியாகி வெற்றி பெற்று இருப்பதால் அடுத்து சுந்தர்.சி டைரக்ஷனில் அவர் எப்போது அழைத்தாலும் நடிப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
கவுதம் மேனன் தற்போது மலையாளத்தில் மம்முட்டி, காளிதாஸ் ஜெயராம் நடித்து வரும் டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இதை முடித்துவிட்டு அவர் விஷால் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது.