ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | ஜிவி பிரகாஷ்குமார் - நடிப்பில் 25, இசையில் 100 | விடாமுயற்சி படத்துடன் மோதும் தண்டேல் | சினேகன் - கன்னிகாவுக்கு இரட்டை பெண் குழந்தை |
பொதுவாக நடிகரோ, நடிகையோ தாங்கள் நடித்த முதல் படம், அல்லது பெரிய வெற்றி பெற்ற படத்தை தங்கள் பெயருக்கு முன்னால் பட்டமாக போட்டுக் கொள்வார்கள். குறிப்பாக வெண்ணிற ஆடை நிர்மலா, நிழல்கள் ரவி. ஆனால் முதன் முதலில் தான் நடித்த விளம்பர படத்தின் பெயரை கோட்டுக்கொண்டவர் ஆர்.பத்மா.
அந்தக் காலத்தில் லக்ஸ் சோப் விளம்பரத்தில் நடிப்பவர் பெரிய நடிகை என்ற இமேஜ் உண்டு. அதாவது ஆண்டுதோறும் அப்போது டாப்பில் இருக்கும் முன்னணி நடிகையை கொண்டுதான் லக்ஸ் நிறுவனம் விளம்பரம் தயாரிக்கும். குறிப்பாக ஒரு அருவியில் லக்ஸ் சோப் போட்டு அந்த நாயகி குளிப்பதுதான் காட்சியாக இருக்கும்.
அந்த வகையில் தென்னிந்தியாவில் இருந்து லக்ஸ் விளம்பரத்தில் நடித்த முதல் நடிகை பத்மா. அப்போது வேறு சில பத்மாக்கள் இருந்ததால் தனது பெயருக்கு முன்னால் லக்சை சேர்த்து 'லக்ஸ் பத்மா' என்று மாற்றிக் கொண்டார்.
1940 - 1950 காலகட்டங்களில் முன்னணியில் இருந்தவர். சபாபதி [1941], என் மனைவி [1942], பிரபாவதி [1944], ஆயிரம் தலைவாங்கி அபூர்வ சிந்தாமணி [1947], குண்டலகேசி [1947], மாரியம்மன் [1948], நவீன வள்ளி [1948], கீத காந்தி [1949], தேவமனோஹரி [1949] போன்ற பல படங்களில் இவர் நடித்தார்.