அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

பிரபல சின்னத்திரை நடிகையான ரவீனா தாஹா குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின் சின்னத்திரையில் ஹீரோயினாக அறிமுகமான அவர் மெளன ராகம் 2 தொடரில் நடித்தார். இன்ஸ்டாகிராமில் படுபயங்கர கிளாமரில் அசத்தி ரசிகர்களையும் கவர்ந்தார். பிக்பாஸ், குக் வித் மோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
இந்நிலையில், சிந்து பைரவி என்கிற புதிய தொடரில் ரவீனா தாஹா இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடிப்பதாக இருந்தது. இதற்கான புரோமோவும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது அந்த தொடரிலிருந்து ரவீனா தாஹா வெளியேறி இருக்கிறார். அவர் வெளியேறியதற்கான காரணம் தெரியாத நிலையில் ரவீனாவிற்கு பதிலாக ஆர்த்தி சுபாஷ் கமிட்டாகியிருப்பதாக செய்தி வெளியாகி வருகிறது.