எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் |
'ஆரண்ய காண்டம்' படத்தின் மூலம் மக்களிடையே கவனம் ஈர்த்த நடிகை யாஸ்மின் பொன்னப்பா. அதன் பிறகு 'கல்கி' படத்தில் நடித்தார். இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான 'இடி மின்னல் மழை' படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார். தற்போது ஒரு பெரிய நடிகர் நடிக்கும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: சில காலம் சினிமாவை விட்டு விலகி இருந்த நான் மனோதத்துவம் படித்து அது தொடர்பான பணிகளை செய்து வந்தேன். தற்போது மீண்டும் நடிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளதால் சினிமாவுக்கு திரும்பியிருக்கிறேன். கேமரா முன் நின்று நடித்த அந்த மேஜிக் தருணங்களை நான் மிகவும் மிஸ் செய்தேன். வித்தியாசமான கதைக்களங்களுக்குள்ளும் மற்றும் ஏராளமான கதாபாத்திரங்களிலும் என்னை முழுமையாக இணைத்துக் கொண்டு நடிப்பில் இன்னும் பண்பட்ட நிலையை அடைய விரும்புகிறேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் சினிமா இன்னும் ஆச்சரியமான களங்களில் பயணிக்க துவங்கியிருக்கிறது. இதில் என் பங்களிப்பையும் இணைத்துக் கொண்டு என்னையும் மெருகேற்ற விரும்புகிறேன். பல அற்புதமான படைப்பாளிகளுடன் இணைந்து பணியாற்றவும் விரும்புகிறேன். படத்தில் எவ்வளவு நேரம் நடிக்கவிருக்கிறோம் என்பதை தாண்டி சில நிமிடங்கள் வந்தால் கூட எனக்கான கதாபாத்திரம் எவ்வளவு ஆழமாக உள்ளது, கதையில் எனது கதாபாத்திரம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் இருக்கும் என புரிந்து நடிக்க இருக்கிறேன். இவ்வாறு யாஸ்மின் பொன்னப்பா கூறினார்.