பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் | கரூர் சம்பவம் தனி நபர் மட்டுமே பொறுப்பல்ல... : அஜித் பேட்டி | என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? |

'தி கோட்' படத்தை அடுத்து எச்.வினோத், இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இது அவரது கடைசி படம் என்பதால் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. விஜய்யுடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி உள்ளிட்ட பல முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்த படம் 2025ம் ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வருகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாதத்தோடு மொத்த படப்பிடிப்பையும் முடிப்பதற்கு திட்டமிட்டுள்ளார்கள். அதோடு சமீபத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் இணையத்தில் கசிந்ததால், விஜய் 69வது படப்பிடிப்பு நடைபெறும் பகுதிகளில் பலத்த செக்யூரிட்டி போட்டுள்ளார் எச். வினோத். அதன் காரணமாக படப்பிடிப்பு தளத்துக்குள் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்றும் அவர் ஒரு தடை உத்தரவு போட்டு இருக்கிறார்.