ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கடந்த 20 வருடங்களுக்கு முன்பு தமிழில் 'கண்ணன் வருவான், வேதம், பாளையத்தம்மன், சபாஷ்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. 2000ம் ஆண்டு வரை தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனவர், பின்னர் கணவருடன் சர்ச்சை ஏற்பட்டு அவரை விவாகரத்து செய்து மறு திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார். மேலும் அடிப்படையில் பரதநாட்டிய கலைஞரான அவர், தற்போது அமெரிக்காவில் நடனப் பள்ளி ஒன்றும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் 11,600 பரதநாட்டிய கலைஞர்களை ஒன்றிணைத்து எட்டு நிமிட பாடல் ஒன்றுக்கு அழகாக நடனமாடி புதிய கின்னஸ் சாதனை ஒன்றை படைத்துள்ளார் திவ்யா உன்னி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டிய மங்கைகள் அனைவருமே ஒரே நிறத்தில் உடை அணிந்து இருந்தது கூடுதல் ஆச்சரியம். அதுமட்டுமல்ல இதில் ஏழு வயது சிறுமி கூட பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
இதில் 10,176 பரதநாட்டிய கலைஞர்களும் சுமார் 500 பரதநாட்டிய ஆசிரியர்களும் இணைந்து கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை கேரள கலாசாரத்துறை அமைச்சர் ஷாஜி செரியன் துவங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் வெளிநாடுகளில் இருந்தும் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் இருந்தும் கூட பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.