32 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படத்தில் நடிக்கும் மதுபாலா | எம்புரான் பட ரிலீசுக்கு முன்னதாக லூசிபர் முதல் பாகத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய திட்டம் | கேரள மாணவன் தற்கொலை : சமந்தாவின் இரங்கலும் கண்டனமும் | பறந்து போ : ரோட்டர் டேம் திரைப்பட விழாவிற்கு தேர்வு | இட்லி கடை : அருண் விஜய்யின் முதல் பார்வை வெளியானது | காதலியை மணந்தார் கிஷன் தாஸ் | மணிரத்னம், லோகேஷ் படத்தில் நடிக்க ஆசை : நாக சைதன்யா பேட்டி | பிளாஷ்பேக் : அன்றைக்கே 40 லட்சம் வசூலித்த 'மங்கம்மா சபதம்' | நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் |
முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்தால் அந்த படம் எப்போதுமே ஸ்பெஷலாக இருக்கும். அந்த வரிசையில் 1941ல் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த பி.யூ.சின்னப்பாவும், டி.ஆர்.மகாலிங்கமும் இணைந்து நடித்த படம் 'தயாளன்'. இருவருமே பாடலிலும் சிறப்பானவர்கள் என்பதால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த படத்தில் பி.எஸ்.ஞானம், சி.டி.ராஜகாந்தம் என்ற இரண்டு பிரபல நடிகைகள் நடித்தார்கள். இவர்களுடன் நடித்தவர் கே.வி.ஜெயகவுரி. அப்போது பெரிதும் அறியப்படாத இவர்தான் கதை நாயகனுக்கு ஜோடியாக நடித்தார்.
இந்த படத்தை மித்ரா தாஸ் இயக்கினார். எட்டயபுரம் இளவரசர் காசி விஸ்வநாத பாண்டியன் எழுதிய கதைக்கு குப்புசாமி கவி திரைக்கதை வசனம் எழுதினார். மார்டன் தியேட்டர்ஸ் சார்பில் டி.ஆர்.சுந்தரம் தயாரித்தார்.
மன்னன் அற்புத வர்மனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் மகன் தயாளன்(பி.யு.சின்னப்பா). இரண்டாவது மனைவியின் மகன் பரதன்(டி.ஆர்.மகாலிங்கம்). இருவரும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். இந்த நேரத்தில் அமைச்சர் ஒருவன் மன்னனுக்கு துரோகம் செய்து தானே மன்னராவதோடு, தயாளனையும் சிறையில் அடைக்கிறான். சிறையில் இருந்து தப்பும் தயாளனும், அவருடன் பரதனும் இணைந்து எப்படி இழந்த ராஜ்யத்தை மீட்கிறார்கள் என்பதுதான் கதை.
இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் ஹீரோக்களை விட தயாளன் காதலியாக நடித்த கே.வி.ஜெயகவுரியை பற்றித்தான் அன்றைக்கு ரசிகர்கள் பேசிக் கொண்டார்கள். அவ்வளவு அழகாக இருந்திருக்கிறார் கவுரி. படத்தில் 3 பாடல்களை பாடி இருந்தார். ஆனால் இந்த படத்திற்கு பிறகு அவர் பெரிதாக எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவரைப் பற்றிய வேறு தகவல்களும் இல்லை.