என் அரசியல் பார்வையை பாராட்டிய கமல்! - ஜி.வி. பிரகாஷ் | விஜய்யின் ‛ஜனநாயகன்' படத்தின் முதல் பாடல் எப்போது ரிலீஸ்? | ‛ரெட்ரோ' படத்தில் சூர்யா - ஸ்ரேயா நடன பாடல் காதலர் தினத்தில் ரிலீஸ்! | நானியுடன் மூன்றாவது முறையாக இணைந்த அனிருத்! | நீ லெஸ்பியனா? ஜாக்குலின் அதிரடி பதில் | பேட் கேர்ள் டீசருக்கு தொடரும் கண்டனம்: படத்தை தடை செய்யுமாறு புகார் | ரம்யா பாண்டியன் சகோதரர் திருமணம்: காதலியை கரம் பிடித்தார்; வைரலாகும் போட்டோ | ‛சித்தா' இயக்குனர் அருண்குமார் திருமணம்: பிரபலங்கள் நேரில் வாழ்த்து | ‛மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகளை துவங்கிய சசிகுமார்! | ஜூனியர் என்டிஆர் - நீல் படப்பிடிப்பு குறித்து புதிய அப்டேட்! |
அல்லு அர்ஜுன் நடிப்பில் திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சிறப்பு காட்சியை காண அல்லு அர்ஜுனும் சென்றதால், அதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் தான் அந்த பெண் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டு அல்லு அர்ஜுன் மீது காவல்துறை கைது நடவடிக்கை எடுத்தது. மறுநாளே அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நேரத்தில் அல்லு அர்ஜுனின் செயல்பாட்டை தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கடுமையாக விமர்சித்த நிலையில், தெலுங்கானாவில் எந்த திரைப்படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிடுவதற்கு அனுமதி இல்லை என்று அறிவித்திருக்கிறார்.
இந்த நேரத்தில் நேற்று உஸ்மானியா என்ற பல்கலைக்கழத்தைச் சேர்ந்த மாணவர்கள் அல்லு அர்ஜுனின் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில் அவர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். இந்நிலையில், நடிகர் அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களுக்கு ஒரு பதிவு போட்டுள்ளார்.
அந்த பதிவில், ‛‛உங்களது உணர்வுகளை எப்போது போன்று பொறுப்புடன் பதிவு செய்யுங்கள். அதேசமயம் தவறான கருத்துக்களை யாரும் பதிவு செய்ய வேண்டாம். முக்கியமாக என்னுடைய ரசிகர்கள் என்ற பெயரில் போலியான சமூகவலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டு அவதூறு கருத்துக்களை சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு போலி சமூக வலைதள பதிவுகளுக்கு எனது ரசிகர்கள் யாரும் ஆதரவளிக்க வேண்டாம்'' என்று குறிப்பிட்டுள்ளார் அல்லு அர்ஜுன்.