அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் |

விஜய் நடிப்பில் கோட் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்து எந்த ஹீரோவை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் வெங்கட் பிரபு அளித்த ஒரு பேட்டியில், சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு படத்தை இயக்க ஏஜிஎஸ் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தேன். ஆனால் விஜய் கால்சீட் கிடைத்ததால் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் படத்தை இயக்கினேன். அடுத்தபடியாக சத்யஜோதி நிறுவனத்திற்கு ஒரு படம் இயக்கப் போகிறேன். அது குறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. எனது அடுத்த படத்தில் நடிக்கும் ஹீரோ குறித்த தகவல் விரையில் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் வெங்கட் பிரபு.
வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் நடிப்பது சிவகார்த்திகேயனா? இல்லை வேறு ஹீரோவா? என்பது விரைவில் தெரியவரும்.