9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

இந்தியத் திரைப்படங்களுக்கான வெளிநாட்டு மார்க்கெட்டில் முக்கியமானது அமெரிக்க மார்க்கெட். மற்ற நாடுகளை விடவும் அங்குள்ள இந்தியர்களால் அதிகம் விரும்பிப் பார்க்கப்படும் படங்களாக இந்தியப் படங்கள் உள்ளன. குறிப்பாக தெலுங்குப் படங்களுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. அந்த அளவிற்கு தெலுங்கு மக்கள் அங்கு அதிகம் வசிக்கிறார்கள்.
அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த 'புஷ்பா 2' படம் ஒரு வாரத்திற்குள்ளாகவே அமெரிக்காவில் 10 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் 85 கோடி.
அமெரிக்க வசூலில் 20 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலுடன் 'பாகுபலி 2' படம் முதலிடத்தில் உள்ளது. 'கல்கி 2878 ஏடி' படம் 18 மில்லியன் வசூலுடன் 2வது இடத்திலும், 'ஆர்ஆர்ஆர்' படம் 15 மில்லியன் வசூலுடன் 3வது இடத்திலும் உள்ளன. தற்போது 'புஷ்பா 2' படம் 10 மில்லியன் வசூலுடன் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. 5வது இடத்தில் 8 மில்லியன் வசூலுடன் 'சலார்' படம் உள்ளது.
'பாகுபலி 2' வசூலை 'புஷ்பா 2' படம் முறியடித்து நம்பர் 1 இடத்தைப் பிடிக்குமா என அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.