சமீபத்தில் தமிழில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து திரைக்கு வந்த 'அமரன்' படம் உலகளவில் சுமார் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் உச்சமாக அமைந்துள்ளது.
இந்த நிலையில் இன்று திடீரென சிவகார்த்திகேயன் அவரது மனைவி ஆர்த்தி உடன் மதுரையில் உள்ள அழகர்கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் மேற்கொண்டார். அழகர்கோயிலில் காவல் தெய்வமாக விளங்கும் பதினெட்டாம்படி கருப்பணசாமி சன்னதி சென்று அங்கும் தரிசனம் செய்தார். அப்போது கருப்பணசாமி கோயிலுக்கு காணிக்கை செலுத்தும் விதமாக அரிவாள் வழங்கினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.