நடிகர் சங்க புதிய கட்டிடம் திறப்பது எப்போது? - நிர்வாகிகள் ஆலோசனை | புதிய பாடல்களை விமர்சிக்க வேண்டாம் : சித்ரா வேண்டுகோள் | பிளாஷ்பேக் : பராசக்தி உருவான கதை இதுதான் | ஆமீர்கான் விரைவில் மூன்றாவது திருமணம்? | வீல் சேரில் வந்து புரமோஷன் செய்த ராஷ்மிகா | நானி நடித்த 'ஹை நன்னா' படம் மீது காப்பி குற்றச்சாட்டு | 20 பேரிடம் இருந்து உரிமை வாங்கப்பட்ட 'தண்டேல்' | பெப்ஸி - தயாரிப்பாளர்கள் சங்கம் மோதல் : உருவாகிறது 'தமிழ்நாடு திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம்' | துல்கர் சல்மானுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே | விடாமுயற்சி படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் |
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்த 'புஷ்பா 2' படம் இன்று(டிச., 5) பான் இந்தியா படமாக வெளியானது.
இப்படத்தின் பிரிமியர் காட்சி நேற்று ஹைதராபாத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் நடந்தது. அந்தக் காட்சியில் நடிகர் அல்லு அர்ஜுனும் படம் பார்த்தார். தியேட்டரில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக போலீசார் தடியடி நடத்தினர். அதனால் கலைந்த ஓடிய கும்பலில் ஒருவர் மீது மற்றவர் விழுந்து தவித்தனர். அதில் 39 வயது பெண் ஒருவர் இறந்து போனார். கணவர், தனது இரண்டு குழந்தைகளுடன் அந்தப் பெண் படம் பார்க்க வந்திருந்தார்.
இதனிடையே, அந்தப் பெண் குடும்பத்திற்கு உதவி செய்வோம் என தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில், “நேற்று இரவு திரையிடலின் போது நடந்த சோகமான சம்பவத்தால் நாங்கள் மிகவும் மனவேதனை அடைந்துள்ளோம். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அந்தக் குடும்பம் மற்றும் மருத்துவ சிகிச்சையில் இருக்கும் சிறு குழந்தையுடன் உள்ளன. இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பதற்கு சாத்தியமான அனைத்து ஆதரவை வழங்குவதற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார்கள்.