நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

இந்தியாவே எதிர்பார்த்து காத்திருக்கும் 'புஷ்பா 2' படம் வருகிற 5ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை சுகுமார் இயக்கியுள்ளார். தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்துள்ளார். இந்த படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. ஆந்திரா, தெலுங்கானாவில் முதல் வாரத்திற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி விட்டதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் 'ஸ்பெஷல் பிரிமியர் ஷோ' என்ற பெயரில் 4ம் தேதி (நாளை இரவு) 9 மணிக்கு முக்கியமான மால் தியேட்டர்களில் திரையிடப்படுகிறது. இந்த ஸ்பெஷல் ஷோவிற்கான கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தி உள்ளனர். அதன்படி அதிகபட்சமாக 1200 ரூபாய் வரை டிக்கெட் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மும்பையில் பிவிஆர் சினிமாஸ் 5ம் தேதி 450 ரூபாய் முதல் 900 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்கிறது. ஸ்பெஷல் காட்சிக்கான கட்டணத்தை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி ஆன்லைனில் டிக்கெட் விற்பனை செய்து வருகிறது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் டிக்கெட் விலையை உயர்த்திக் கொள்ள அம்மாநில அரசுகள் அனுமதி வழங்கியுள்ளன.




