வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய பிறகு அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வரும் விஜய், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமான இன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம் முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்குரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை தடுக்க நீதித்துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையதளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து தமிழக அரசு தனி இணையதளத்தை உருவாக்கி பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் என்று அந்த அறிக்கையில் நடிகர் விஜய் தெரிவித்து இருக்கிறார்.