ஹாலிவுட் மியூசிக் மீடியா விருதுக்கு நாமினேட் ஆன ‛ஆடுஜீவிதம்' பாடல் | வீடியோ ஆல்பத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் ? விஜய் தேவரகொண்டா பதில் | மாமியார் பற்றி சிலாகிக்கும் சமீரா ரெட்டி | அல்லு அர்ஜுனுக்கு ஆறு மாத டைம் கொடுத்த பாலகிருஷ்ணா | பொன்னியின் செல்வன் அர்ஜுன் சிதம்பரம் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது | மூன்றே வினாடி 'மேக்கிங் வீடியோ' : தனுஷ் கேட்ட 10 கோடி நஷ்ட ஈடு | சூர்யா 45 - நம்பிக்கையுடன் எழுதி வரும் ஆர்ஜே பாலாஜி | நயன்தாரா திருமண வீடியோ, தாமத வெளியீட்டிற்குக் காரணம் இதுதானா ? | மீண்டும் அஜித் - சிவா கூட்டணி 'வி' தலைப்புகளைத் தேடும் ரசிகர்கள் | 5 மொழிகளில் வெளியாகும் குபேரா |
தியாகராஜ பாகவதர் உச்சத்தில் இருந்தபோது அவருக்கு போட்டியாக வந்தவர் பி.யு.சின்னப்பா. பாடகர், நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு தற்காப்பு கலை வீரர். முதன் முதலில் சண்டை காட்சிகளை வடிவமைத்தவர். கொஞ்சம் முரட்டு சுபாவம் கொண்டவர். படப்பிடிப்பு தளத்தில் கோபம் அடைந்து அவ்வப்போது பலரை அடித்த சம்பவங்கள் நிறைய உண்டு. அதில் ஒரு இயக்குனரை துப்பாக்கியால் சுட்ட கதையும் உண்டு.
எல்லீஸ் ஆர்.டங்கன் என்ற அமெரிக்கர் தமிழில் படம் இயக்கி கொண்டிருந்தபோது இந்தியாவில் இருந்து அமெரிக்கா சென்று அங்கு சினிமா பற்றி படித்து இங்கு படம் இயக்கியவர் மும்பையை சேர்ந்த மாணிக் லால் டான்டன். தமிழில் பக்த நந்தனர், பாமா விஜயம் உள்ளிட்ட பல படங்களை இயக்கினார். அடிப்படையில் பெரிய பணக்காரர். பி.யூ சின்னப்பா நாயகான நடிக்க அவர் இயக்கிய படம் 'யாயாத்தி'. இது மகாபாராத யுத்தம் தொடங்குவதற்கு முன்பு வாழ்ந்த ஒரு இளவரசனின் கதை.
இந்த படத்தில் சின்னப்பாவுடன் பி.பி.ரங்காச்சாரி, எம்.வி.ராஜம்மா, சி.எஸ்.ஷாமன்னா, சி.எஸ்.எம்.சுலோச்சனா, டி.எஸ்.கிருஷ்ணவேணி, எம்.எஸ். சுப்ரமணிய பாகவதர், எம்.எஸ்.பாபு, கே.எஸ்.ஹரிஹர ஐயர், எஸ்.சி.கோமதி பாய் உள்ளிட்ட பலர் நடித்தனர்.
மோகன் மூவி டோன் என்ற நிறுவனம் தயாரித்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் கோல்கட்டாவில் நடந்தது. படத்தில் ஒரு சுடுகாட்டு காட்சி எடுக்கப்பட்டபோது பி.யு.சின்னப்பாவுக்கும், இயக்குனருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது தீவிரமாகிவிட்டது. இதனால் கோபம் அடைந்த சின்னப்பா தனது துப்பாக்கியை எடுத்து இயக்குனரை நோக்கி சுட்டார். இதில் காயம் எதுவும் ஏற்படாமல் தப்பித்த இயக்குனர் படத்திலிருந்து வெளியேறி விட்டார்.
சின்னப்பாவுக்கு இயக்குனரை கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை. அவரை பயமுறுத்த அவரை சுற்றி சுட்டார் என்றும் கூறப்படுகிறது. துப்பாக்கியை காட்டி மிரட்டினார் சுடவில்லை என்ற தகவலும் உண்டு.