Advertisement

சிறப்புச்செய்திகள்

அல்லு அர்ஜுனுக்கு ஆறு மாத டைம் கொடுத்த பாலகிருஷ்ணா | பொன்னியின் செல்வன் அர்ஜுன் சிதம்பரம் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது | மூன்றே வினாடி 'மேக்கிங் வீடியோ' : தனுஷ் கேட்ட 10 கோடி நஷ்ட ஈடு | சூர்யா 45 - நம்பிக்கையுடன் எழுதி வரும் ஆர்ஜே பாலாஜி | நயன்தாரா திருமண வீடியோ, தாமத வெளியீட்டிற்குக் காரணம் இதுதானா ? | மீண்டும் அஜித் - சிவா கூட்டணி 'வி' தலைப்புகளைத் தேடும் ரசிகர்கள் | 5 மொழிகளில் வெளியாகும் குபேரா | அப்பாவை இயக்கி உள்ள உமாபதி ராமய்யா | பிடிக்காத பெண்ணை காதலிக்கும் ஹீரோ: 'மிஸ் யூ'இயக்குனரின் புதிய காதல் கதை | பிளாஷ்பேக் : தெலுங்கில் டாப் ஹீரோவாக இருக்கும்போதே தமிழில் வில்லனாக நடித்த சிரஞ்சீவி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தனுஷ் என்னை பழிவாங்குகிறார் : நயன்தாரா சரமாரி குற்றச்சாட்டு

16 நவ, 2024 - 01:38 IST
எழுத்தின் அளவு:
Dhanush-is-taking-revenge-on-me:-Nayanthara-barrages-accusations

தனது திருமணம் பற்றிய ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. இது திரையுலகினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து 2022ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர், உலக் என்ற இரு மகன்கள் உள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமணம் பிரபல ஓடிடி தளத்தில் 'Nayanthara: Beyond the Fairy Tale' என்ற பெயரில் ஆவணப்படமாக நவ., 18ல் வெளியாகிறது. இந்த ஆவணப்படம் இவ்வளவு காலம் தாமதமாக வெளியாக காரணமே நடிகர் தனுஷ் தான் என குற்றம் சாட்டி உள்ளார் நயன்தாரா. மேலும் தனுஷை பற்றி கடுமையாக விமர்சித்தும் உள்ளார். இதுதொடர்பாக நயன்தாரா வெளியிட்ட நீண்ட அறிக்கை வருமாறு...



பழிவாங்கும் நடவடிக்கை
உங்கள் தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன் துணையோடு நடிகராக மாறி இருக்கும் தனுஷ் புரிந்து கொள்ள வேண்டும். எந்த சினிமா பின்புலம் இன்றி தனி ஒரு பெண்ணாக, சவால்கள் நிறைந்த திரைத்துறைக்கு வந்து, கடின உழைப்பாலும், நேர்மையான அர்ப்பணிப்பாலும் இன்றைய நிலையை அடைந்திருக்கிறேன்.

'Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படத்தை பல்வேறு தடைகளையும் கடந்து வெளியீட்டுக்கு தயார் செய்திருக்கிறோம். உங்களது பழிவாங்கும் நடவடிக்கையால் நானும், எனது கணவர் மற்றும் இதற்காக உழைத்த அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளோம். காதல், திருமணம் உள்ளிட்ட எனது வாழ்வின் மகிழ்வான தருணங்கள் இடம் பெற்றுள்ள இந்த ஆவணப்படத்தில் என் வாழ்வின் மகத்துவமான காதலை கண்டடைந்த 'நானும் ரௌடிதான்' திரைப்படம் இல்லாததன் வலி மிகவும் கொடுமையானது.

இரு ஆண்டுகளாக போராட்டம்
இந்த ஆவணப்படத்தில் 'நானும் ரௌடிதான்' படத்தின் காட்சிகள், பாடல்ள், போட்டோக்களை பயன்படுத்த உங்களிடம் தடையில்லா சான்று கேட்டு 2 ஆண்டுகளாக காத்திருந்தோம். எங்கள் எல்லாப் போராட்டங்களும் பலனளிக்காத நிலையில், அந்த முடிவையே கைவிட்டு. ஆவணப்படத்தில் திருத்தங்கள் செய்தோம்.



'நானும் ரௌடிதான்' பட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுவதற்கு முக்கியமான காரணம் இதயத்திலிருந்து எழுதப்பட்ட அதன் வரிகள். ஆனால் அந்த வரிகளைக் கூட ஆவணப்படத்தில் பயன்படுத்தக் கூடாது என்பது எந்த அளவிற்கு வருத்தத்தை ஏற்படுத்தும் என்பது உங்களைத் தவிர மற்ற அனைவருக்கும் புரியும். தடையில்லா சான்றிதழ் மறுக்கப்பட்டது வியாபார ரீதியாகவோ அல்லது சட்ட ரீதியாகவோ இருந்தால் நிச்சயம் ஏற்றிருப்பேன். ஆனால் என்மீதான தனிப்பட்ட வெறுப்பால் மட்டுமேயான, உங்களது இந்த நடவடிக்கைகளை எப்படி ஏற்க முடியும்?.

3 விநாடிக்கு ரூ.10 கோடியா...
சமீபத்தில் வெளியான ஆவணப்படத்தின் டிரைலரில் 3 விநாடி வீடியோவிற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அதிலும் ஒரு காட்சிக்கு ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு இருப்பது விநோதமாக உள்ளது. கீழ்தரமான இந்த செயல், ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மேடைகளில் உங்கள் அப்பாவி ரசிகர்கள் முன் பேசுவைதப் போல், ஒரு சதவீதம் கூட உங்களால் நடந்துகொள்ள முடியாது என்பதை நானும், எனது கணவரும் நன்றாகவே அறிந்திருக்கிறோம்.



எனது திரைப்பயணத்தின் இனிமையான நினைவுகளைக் கொண்ட பல்வேறு காட்சிகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றிருக்கின்றன. அதற்காக அந்தந்த தயாரிப்பாளர்களிடம் அணுகியபோது அவர்கள் அனுமதித்தனர். அப்போதுதான் உங்களில் இருந்து அவர்கள் எவ்வளவு மாறுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. அதனால்தான், காலங்களை கடந்தும் கொண்டாடப்படுபவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

போலியான முகமூடி
'நானும் ரௌடிதான்' படம் வெளியாகி 10 ஆண்டுகளை கடந்த பின்பும், உங்களது இழிவான செயல்களை மறைக்கும் வகையிலான போலியான முகமூடியை அணிந்து கொண்டு உங்களால் வலம் வர முடியும். ஆனால், தயாரிப்பாளராக பெரும் வெற்றியைக் கொடுத்த, ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்படும் ஒரு திரைப்படத்திற்கு எதிரான உங்களது கொடும் சொற்களை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது. அதனால், ஏற்பட்ட காயமும்
என்றென்றும் ஆறாது. அந்தப் படத்தின் வெற்றி, உங்களை உளவியல்ரீதியாக வெகுவாக பாதித்ததை சினிமா நண்பர்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். பின்னர், சினிமா விழாக்களில் (Filmfare 2016) நீங்கள் அதிருப்தியை வெளிப்படுத்திய விதம், சாதாரண பார்வையாளருக்கும் அதனை நன்றாகவே புரிய வைத்தது.



தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள்
எந்த ஒரு துறையிலும் வியாபார ரீதியான போட்டிகள் தவிர்க்க முடியாதவை. ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் ஒருவர் இன்னொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட முடியாது. அநாகரிகமான அந்த செயல்களை செய்வது உங்களைப் போன்ற பிரபலமான நடிகரே ஆனாலும், தமிழ்நாட்டு மக்கள் அதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த உலகம் எல்லோருக்குமானது. கடின உழைப்பால், கடவுளின் ஆசிர்வாதத்தால், மக்களின் பேரன்பால், சினிமாவில் எந்தப் பின்புலமும் இல்லாத ஒருவரும் இங்கு வெற்றி பெறுவதும், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்வதும் உங்களை எந்தவிதத்திலும் பாதிக்காது.

அட்வைஸ்
அடுத்த இசை வெளியீட்டு விழாவில், இது எதுவுமே நடக்கவில்லை என மறுத்து கற்பனையாக சில கதைகளை புனைந்து, அதனையே உண்மையைப் போல் நீங்கள் சொல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால், அதனை கடவுள் பார்த்துக் கொண்டிருப்பார் என்பதை மறந்து விடாதீர்கள். இந்த நேரத்தில், ஜெர்மனிய மொழியின் "Schaden freude" எனும் வார்த்தையை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன், அதன் அர்த்தத்தை தெரிந்துக் கொண்டு இனி யாருக்கும் அதனை செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.



உங்க டயலாக்கை நீங்க முதல் பின்பற்றுங்க
"மகிழ்வித்து மகிழ்" என்பதே உண்மையான மகிழ்ச்சி, கொண்ட்டாட்டங்கள் நிறைந்த இந்த வாழ்வை எல்லோரும் புன்னகையோடு கடக்க வேண்டும் என்பதையே எனது குறிக்கோளாக கொண்டிருக்கிறேன். அதனை அடிப்படையாகக் கொண்டே Nayanthara: Beyond the Fairy Tale' ஆவணப்படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதனை ஒருமுறை பார்த்தால், உங்கள் எண்ணங்களும் நேர்மறையாக நிச்சயம் மாறும். எல்லா மேடைகளிலும் நீங்கள் சொல்லும் "Spread Love" என்பதை, வெற்று வார்த்தைகளாய் மட்டுமின்றி, ஒரே ஒரு முறையாவது வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும் என இனி நானும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
3வது வாரத்தில் 300 கோடியை நோக்கி 'அமரன்'3வது வாரத்தில் 300 கோடியை நோக்கி ... பிளாஷ்பேக் : இயக்குனரை துப்பாக்கியால் சுட்ட பி.யு.சின்னப்பா பிளாஷ்பேக் : இயக்குனரை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

தமிழன் - கோவை,இந்தியா
16 நவ, 2024 - 02:11 Report Abuse
தமிழன் தனது திருமண வீடியோவை வெளியிட்டு செமத்தையாக கல்லா கட்ட நினைக்கும் நீ, தன் படத்தின் பதிவை நீ உபயோகிக்க பணம் கேட்டால், நீ நல்லவள் தனுஷ் கெட்டவன் சினிமாவில் யாரும் யோக்கியர்கள் கிடையாது என்பதை நாடே அறியும் நீ கல்லா கட்ட நினைப்பதைப் போல தனுஷும் கல்லா கட்ட நினைப்பதில் தவறில்லை மேலும் உன் புருஷனுக்கு வாய்ப்பளித்து தனுஷ்தான் அப்போதெல்லாம் இனித்ததோ?? இப்போது கசக்கிறதா?? நீ எப்படியெல்லாம் முன்னேறினாய் என இந்த உலகமறியும் யோக்கிய சிகாமணி போல வேஷம் போடாதே சினிமாவில் ஒரு சிலரை தவிர எவனும் எவளும் யோக்கியம் கிடையாது இது தனுஷுக்கும் உனக்கும் பொருந்தும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)