லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
ரஜினி- பிரபு இணைந்து நடித்த குரு சிஷ்யன் என்ற படத்தில் தமிழுக்கு வந்தவர் தெலுங்கு நடிகை கவுதமி. அதன் பிறகு தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வந்தவர் திருமணமான சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்றார். அதன்பிறகு 2005 முதல் 2016 ஆம் ஆண்டு வரை கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்தவர், அவருடன் இணைந்து பாபநாசம் படத்திலும் நடித்திருந்தார்.
அதன்பிறகு தெலுங்கு, மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த கவுதமி தற்போது சின்னத்திரை சீரியலில் என்ட்ரி கொடுக்கப் போகிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நெஞ்சத்தை கிள்ளாதே' என்ற தொடரில் கவுதமி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் நடித்துள்ள காட்சிகள் விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.